தினமும் மோர் குடிப்பதால் கிடைக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். கோடை வெயில் கொளுத்திவருகின்ற நிலையில் சிறுநீர் கடுப்பு, எரிச்சலுடன் சிறுநீர் கழிதல், தாகம் முதலான பிரச்னைகளுக்கு நீர்மோர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மோர் சுவையாக இருப்பதுடன் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. ஆனால், மோர் சாப்பிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் பலர் மோர் சாப்பிட அச்சப்படுகிறார்கள்.
மோர் இயற்கையான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் உட்கொள்வதால் மிகுந்த நன்மை அளிக்கும். ஆகவே தினமும் மோர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
நன்மைகள் வருமாறு:
- மோர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
- கல்லீரல் மற்றும் உடலிலிருந்து நச்சுக்களை நீக்குகிறது.
- மோரில் அதிகம் கால்சியம் இருக்கிறது. ஆகவே மோர் குடிப்பதால் எலும்புகள் நல்ல பலம் பெறும்.
- மோர் குடித்தால் அசிடிட்டி பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
- செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
மோர் குடித்தால் நீரிழப்பைத் தடுக்கிறது.கோடை காலத்தில் நம் உடலை நீர் சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து மோர் குடித்து வந்தால், உங்கள் உடல் எப்போதும் நீர் சத்துடன் இருக்கின்றது. வெயிலில் வீட்டை விட்டு வெளியில் செல்ல நேரிட்டால், வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க முதலில் மோர் அருந்தலாம். கோடைக்காலத்தில் தொடர்ந்து மோர் குடிப்பதால், வயிற்றின் வெப்பம் தணிந்து, உடலில் நல்ல புத்துணர்ச்சியை பெறலாம்.
உடல் எடையை குறைக்க மோர் குடிக்கலாம். மோர் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது. இது உடலின் எடையினைக் குறைக்க உதவுகின்றது. மோர் மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டு இருக்கிறது. ஆனால் இது உடல் எடையினைக் குறைக்கத் தேவையான மற்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது.
மோரில் உடலுக்கு பலன் கொடுக்கும் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இதனை உட்கொள்வதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். பசியிலிருந்து விடுபடலாம்.
மோர் தசைகளை பலப்படுத்துகிறது. மோர் தினசரி உட்கொள்ள வேண்டும். தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். மோர் வைட்டமின்-சி மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இத்தகைய இரண்டு சத்துக்களும் தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. மோர் குடிப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஈரப்பதமாகி வறண்டு போகும் பிரச்சனையினைப் போக்குகிறது
மோரில் புரோபயாடிக் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது தோல் மற்றும் முடிக்கு நீர் சத்தினை வழங்குகிறது. இப்போது இருக்கும் கோடை வெயிலில் மோரை உட்கொண்டால் மேற்சொன்ன நல்ல பலன்களைப் பெறலாம்.
மேலும் படிக்க