உடலில் ஏற்படக் கூடிய மூட்டு வழி, எலும்பு தேய்மானம் முதலான பிரச்சனைகளுக்கு அத்தி ஒரு நல்ல அருமருந்தாகச் செயல்படுகிறது. இது போன்ற அத்தியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அத்திப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக இருக்கிறது. மூட்டு வலி, எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய் முதலான பிரச்சனைகளுக்கு அத்தி ஒரு அருமருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிடும் போது, 3 % கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
பெரும்பாலான மக்கள் அவற்றை உலர்பழங்களாகச் சாப்பிடுவதையே தங்களது வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஊறவைத்த 3 அத்திப்பழங்களைத் ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டு செயல்பட்டால் பல நோய்கள் உடலைவிட்டு விலகும். இதில் வைட்டமின் சி மற்றும் இ அதிகம் இருக்கின்றன. அத்திப்பழங்களில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் இருப்பதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
மேலும் படிக்க: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை: இன்றே அப்ளை பண்ணுங்க!
இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் போன்றவைகள் நிறைந்துள்ளன. இது பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக, தொடர்ந்து அத்திப்பழத்தைச் சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் மறையும். மேலும், ஆண்களின் விந்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
துத்தநாகம், நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு முதலான தாதுக்கள் அத்திப்பழத்தில் (Healthy Fruit) காணப்படுகின்றன. இது நாள் முழுவதும் உடலின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.
இதில் நார்சத்து, நிறைந்திருப்பதால் மலசிக்கல், செரிமானப் பிரச்சனையைச் சரிசெய்ய உதவுகிறது. காலையில் அத்திப்பழங்களை ஊறவைத்துச் சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்தத் துணைபுரிகிறது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து இருக்கிறது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்பினைப் பராமரிக்கிறது.
உலர்ந்த அத்திப்பழங்களைத் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் அல்லது இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அத்திப்பழத்தைப் பாலில் கலந்து சாப்பிட்டாலும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
மின் கட்டண உயர்வை நிறுத்துங்க: பின்னலாடை தொழிலார்கள் கோரிக்கை!