எலுமிச்சை பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போது அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்காங்க இருக்கிறது. அந்தவகையில் எலுமிச்சை பழத்தில் எந்த வகை நன்மைகள் எல்லாம் உள்ளது என்று பார்க்கலாம்.
எலுமிச்சை (Lemon) ஜூஸில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உள்ளது. சருமத்தை இயற்கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. எலுமிச்சையை நேரடியாக சருமத்தின் மீது தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை அடங்கியுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து சரிசெய்யமுடியும். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை சரிசெய்ய உதவும்.
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு தினமும் காலையில் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய உதவுகிறது.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுபவர்கள், மது, சிகரெட் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறது, அந்த உறுப்பில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து எதிர்காலங்களில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கொரு முறை அல்லது குறைந்த பட்சம் வாரத்திற்கொரு முறை எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை சீராக்குகிறது.
தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் பயனுள்ளதாக இருக்கிறது. எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு எலுமிச்சை சாற்றை நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகிய பிரச்சனைகள் நீங்குகிறது.
மேலும் படிக்க:
கர்ப்பிணிகள் குங்கும பூ சாப்பிடலாமா? டாக்டர் விளக்கம்!
வெங்காயத்தை மாதங்களுக்கு அல்ல, ஆண்டுகளுக்கும் சேமிக்கும் ட்ரிக்ஸ்!!!