அசைவ ப்ரியர்களின் மிகச் சிறந்த தேர்வு என்றால், சிக்கன் எனப்படும் கோழிக்கறிதான். ஆனால் அதில், நாட்டுக்கோழியே சிறந்தது. பிராய்லர் கோழி உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளைக் கொடுக்கும். குறிப்பாகப் பெண்கள் சிறுவயதிலேயே சீக்கிரம் பூப்படைவதற்கு பிராய்லர் கோழியை அதிகம் சாப்பிடுவதே காரணம் எனத் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.
பிராய்லர் கோழி என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கோழி இனம் என்பதால், பெண்கள் இளம் வயதிலேயே பூப்படைகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
ஒரு ஆண் பிராய்லர் சேவல் மூலம் பெண் பிராய்லர் கோழி இணவைதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை செயற்கையாக கருத்தரிக்க இன்குபேட்டர் பயன் படுத்தி மிக குறைந்த நாளில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை ஆகும். இவை நல்ல சதைப் பற்றுடன் இருக்க, ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.
கருத்தரங்கில் தகவல்
இந்நிலையில் பல்லடம் பிராய்லர் கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளில் பிராய்லர் கோழியில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது.மேலும், மருத்துவர்கள், உணவு நிபுணர்கள், சமையல் வல்லுனர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் கமிட்டி செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
-
உடலுக்குப் புரதம் கொடுக்கும் உணவாக பிராய்லர் கோழி உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த தொழிலில் உள்ளனர்.
-
மக்காச்சோளம் மற்றும் சோளம் விவசாயிகளும் இந்த தொழிலால் பயன்பெற்று வருகின்றனர்.
-
பிராய்லர் கோழி குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
-
கோழிக்கு ஊசி போட்டு வளர்ப்பது என்பது தவறு. உயிர் காக்கும் தடுப்பூசி மட்டும் தான் செலுத்தப்படுகிறது.
-
வளர்ச்சி ஊக்கிகள் கொடுப்பது சட்ட விரோதம், அப்படியாக மருந்துகள் எதுவும் கொடுப்பது அவசியம் இல்லை.
-
முழுக்க முழுக்க அரசின் விதிமுறைவிதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம்.
-
பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் பூப்படைவதாகக் கூறப்படுவது, முற்றிலும் தவறு என்று மருத்துவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...