சமையலுக்கானாலும், சருமப் பராமரிப்புக்கானாலும் சரி ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்பது அனைத்து மூலை முடுக்கிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சரி வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்தால், அதன் விலையோ, நாம் பயன்படுத்தும் எண்ணெயைக் காட்டிலும் பல மடங்கு அதிலும்.
அப்படியானால், இந்த எண்ணெய் இப்போதுதான் பிரபலமடைகிறதோ என்று நினைக்க வேண்டாம். ஏனெனில், ஆலிவ் எண்ணெய்யை சங்க காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அக்கால மக்கள் ஆலிவ் எண்ணெயை ‘திரவ தங்கம்’ என்று அழைப்பர். ஆம், ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் பல நன்மைகளை தருகிறது.ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் உடலுக்கு நல்லது என்றும் கருதப்படுகிறது.
மருத்துவ நன்மைகள் (Medicinal benefits)
-
ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, மேம்படுத்த உதவும்.
-
இந்த வைட்டமின்கள் முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக போக்க உதவும்.
-
ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 டேபிள் ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய்யை உட்கொள்ளலாம்.
-
குறிப்பாகக் காலையில் வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெய்யைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
-
அதுவும் சிறிய அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பக்கவிளைவுகள் (Side effects)
அதை விட்டுவிட்டு, அதிகமாக எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்படும். தலைச்சுற்றல், பக்கவாதம், சிறுநீரக் செயலிழப்பு உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க...
6 மாதம்தான்- இல்லையேல், ரேஷன் Card ரத்து!
வெந்நீரில் 10 நிமிடம் ஊறிய வெந்தயம்- Sugar Control நிச்சயம் சாத்தியம்!