1. வாழ்வும் நலமும்

என்றென்றும் இளமைக்கு -தினமும் Walking போதும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Always Youth - Daily Walking Enough!

நடைபயிற்சி என்பது நம் சிறுவயது முதல் நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட முயற்சி. ஆனால், காலப்போக்கில் இயந்திர மயமாகிவிட்ட வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்க நேரம் கிடைக்கவில்லை. இதனால் நடப்பதைத் தவிர்த்தோம், இளமையை இழந்தோம் என்று சொன்னால், அதை ஏற்கத்தான் வேண்டும். 

ஏனெனில், அனுதின நடைபயிற்சி, நமக்கு வயதானத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதைத்தான் நம் பாட்டிகள், தினமும் நடந்தால், முதுமை வராது என்றார்கள். ஏனெனில், ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் ரத்த நாளங்கள் வழியாகவே உடல் முழுதும் செல்கின்றன.

ஆனால், 60, 70 வயதைக் கடந்த சிலர், வயதிற்கு ஏற்ற வயோதிகத்துடன் இல்லாமல், இளமையாக இருப்பதைப் பார்க்கும்போது, அதன் ரகசியம் என்னவாக இருக்கும் எனக் கேட்டு வியப்பு அடைவோம். உண்மையில் இந்த இளமையின் ரகசியம் எது தெரியுமா? தினமும் நடப்பதுதான்.

விரிந்து சுருங்கும் (Expanding and contracting)

அவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத, சீரான ரத்த ஓட்டத்துடன் இருப்பதே இதற்கு காரணம். உடற்பயிற்சி போன்ற அதிக உடல் உழைப்பு இருக்கும் சமயங்களில் ரத்தக் குழாய் விரிவடைந்து, மற்ற நேரங்களில் சுருங்கும்.

ஆக்ஸிஜன் கிடைக்காது (Oxygen is not available)

நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சிகரெட், உடல் பருமன், உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, சுருங்கி விரியும் தன்மை குறைந்து, செல்களுக்கு போதுமான ஆக்சிஜனும், ஊட்டச் சத்துக்களும் கிடைப்பதில்லை.

உடல் பருமன் (obesity)

உடல் பருமன் அதிகமாக இருந்தால், ரத்த நாளங்களை அதிகம் பாதிக்கும். ரத்த நாள அடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள். அதனால், தினமும் நடை பயிற்சி செய்து, கால்களில் ரத்தம் ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அன்றாடம் நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டு, இளமையைத் தக்க வைத்துக்கொள்வோம்.

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

English Summary: Always Youth - Daily Walking Enough! Published on: 20 April 2022, 11:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.