குழந்தைகள் முதல் பெரியவர் வரை குல்ஃபி என்றாலே ரொம்ப பிடித்த ஒன்றாக இருக்கும் என்று சொல்வதில் எந்த ஐயமுமில்லை. இப்போது அந்த குல்பியை இனி வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் எனும் செய்முறையை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் என்று பார்த்தால் பால் - 2 கப் பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் - 1 கப் (துருவியது) சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப சர்க்கரை - 1/2 கப் பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது) ஆகியன இருக்கின்றன. இவற்றினை முதலில் தனியாக எடுத்து வைத்துக் குல்பி செய்ய தயார் ஆக வேண்டும்.
ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்துக் கட்டி சேராதவாறு கலந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு அகன்ற அடிகனமாக இருக்கும் வாணலியினை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடுதல் வேண்டும். அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விடுதல் வேண்டும். அவ்வாரு கிளறிவிடாமல் இருந்தால் அடிபிடித்து விடும். பாலானது சுண்டிச் சற்றுக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுதல் வேண்டும்.
சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கியபின்பு, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டைப் போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
1 மணிநேரம் முடிந்த பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து அதன் பின்பு, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சுவையான குளிர்ச்சியான சாக்லேட் குல்ஃபி ரெடியாகிவிடும்.
மேலும் படிக்க
அலைமோதும் சுற்றுலா பயணிகள்! மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!