1. செய்திகள்

அலைமோதும் சுற்றுலா பயணிகள்! மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

Poonguzhali R
Poonguzhali R
A wave of tourists! Flower fair extended for one more week!

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் ஆகியன இணைந்து நடத்திவருகின்ற தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கி சிறப்புற நடந்து வருகிறது.

இம்மலர் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள், அலங்கார செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களைக் கவருகின்ற வகையில் அழகாக வண்ணமயமாக இடம் பெற்றுள்ளது.

தற்பொழுது தமிழகம்-கேரள மாநிலம் பகுதிகளில் கோடை விடுமுறை காலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

மலர் கண்காட்சி குறித்து மலர் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் குறிப்பிடுகையில், மலர் கண்காட்சி கடந்த ஏப். 1-ந் தேதி முதல் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்துவருகின்ற இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் கோடை விடுமுறையினைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம், அதாவது வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஒரு வார நாட்களில் மேலும் புதியதாகக் கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் கூறுகிறார். கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க

அதிரடி ஆஃபரில் 50MP கேமரா உள்ள Samsung Phone!

தமிழகத்தில் வரப்போகிறது CCTV-யுடன் புதிய பேருந்து நிறுத்தங்கள்!

English Summary: A wave of tourists! Flower fair extended for one more week! Published on: 11 May 2023, 04:11 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.