பால் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பானம் ஆகும். ஆகையால்தான் பெரும்பாலான மக்கள் தினமும் இரவு தூங்கும் முன் கண்டிப்பாக 1 கிளாஸ் பால் குடிக்க வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து பின்பற்றியும் வருகிறார்கள் . பாலின் ஆரோக்கியப் பண்புகளை அதிகரிக்க, பலர் மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை தூள் போன்றவற்றை கலந்து குடித்து வருபவர்கள் ஏராளாம்.
அதுபோலவே, உடலின் எலும்புகள் மற்றும் தசைகள் பலப்பட வேண்டும் என்றால், இதற்கு பாலில் ஆரோக்கியமானவற்றை கலந்து குடிக்கலாம். இது உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு ஆரோக்கிய டிப்ஸ் குறித்துதான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
பாலும் வெந்தயமும்
வெந்தய விதையையும் பாலையும் சேர்த்து குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். பால் கால்சியம் மற்றும் புரதத்தின் களஞ்சியமாக இருக்கிறது. மறுபுறம், வெந்தய விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்து இருக்கிறது. இது உங்கள் எலும்புகளின் பலவீனத்தை நீக்கும். இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
பாலும் ஆளிவிதையும்
எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையினை அதிகரிக்க, ஆளி விதை மற்றும் பால் கலவையை உடலுக்கு எடுத்துக் கொள்ளலாம். இது நமது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நல்லதொரு ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு 1 டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் ஆளி விதையை கலந்து தினமும் இரவில் குடித்தல் நல்ல பலனைப் பெறலாம்.
பாலும் பூசணியும்
பூசணி விதைகளை பாலுடன் சேர்த்து குடிப்பது உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு உகந்தது. இந்த ஆளி விதைகளில் நல்ல அளவு மெக்னீசியம் இருக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பாலுடன் சேரும்போது எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை மேம்படுத்துவதவும் உறுதுணையாக இருக்கும்.
பாலும் சியாவும்
பாலையும் சியா விதைகளையும் ஒன்றாக சேர்த்து உடலுக்கு எடுத்துக்கொள்வது நம் உடலின் பலவீனம் மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது. சியா விதைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. கால்சியம் பாலில் இருக்கிறது. இந்த இரும்புச்சத்து, கால்சியம் இரண்டும் ஒன்று சேரும்போது, உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை தரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க