Health & Lifestyle

Friday, 03 July 2020 05:12 PM , by: Elavarse Sivakumar

நோய் வருவதுற்கு முன்பு தற்காத்துக்கொள்ளுவது நல்லது. ஒருவேளை நோய் தாக்கிவிட்டால், முறையான மருத்துவம் எடுத்துக்கொள்வது அதிலிருந்து மீண்டு வர உதவும். அதேசமயத்தில், மரபியல் ரீதியாக ஒருசில நோய்கள் பரம்பரை பரம்பரையாக தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அந்தப் பட்டியலில், ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனவே இத்தகைய பின்னணி உங்கள் பெற்றோருக்கு இருக்குமானால், வழித்தோன்றல்களான நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியம்.

பணிச்சுமை, பாரம்பரிய உணவு முறைகளைப் புறக்கணித்தது, ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் இவற்றால் 35 வயதைத் தாண்டும்போதே இவ்விரு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

நீரழிவு நோய் - டையாபிட்டீஸ் (Diabetes)

நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையின் அளவு, அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது நீரழிவுநோய்(Diabetes) எனப்படுகிறது. அதாவது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பி, அதிகமாகவோ அல்லது குறைவாகவே சுரந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுகிறது.

வகைகள் (Types)

நீரழிவுநோயில் டைப்1 (Type I), டைப்2 (Type II), கெஸ்டேஷ்னல் டையாபிட்டீஸ் (Gestational diabetes) மற்றும் மோனோஜெனிக் டையாபிட்டீஸ் (Monogenic diabetes) என பல வகைகள் உள்ளன.

இவை, திடீரென ஒரு நாள் நம்மை தாக்குவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நோய் தாக்கத்தை மருத்துவ பரிசோதனைகள் உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகளை உடல் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆனால் அதை நாம் கவனிக்க தவறுகிறோம்.

எனவே நோய் தாக்கத்தை உடல் வெளிப்படுத்தும் வரை காத்திருக்காமல், உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தவறாமல் கண்காணித்து, இவை எந்த நோய்க்கான அறிகுறி என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

அந்த வகையில் நீரழிவுநோய்க்கான அறிகுறிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

அடிக்கடி சிறுநீர்கழித்தல் (Frequent urination)

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லை என்பதை உறுதிப்படுகிறது.

உடல் சோர்வு (Frequent fatigue)

அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் நீர்ச்சத்து குறைதல், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவையும் நீரழிவுநோய்க்கான அறிகுறிகள்.

அடிக்கடி நோய்வாய்ப்படுதல் (Frequent infections)

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், சிறுநீரகம் பாதிக்கப்படும். மேலும் அடிக்கடி சிறுநீரகக் குழாயில் தொற்று ஏற்படுதல்.

உடல் எடை குறைதல் (Unexplained weight loss)

காரணமில்லாமல் உடல் எடை குறைதல். அதாவது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை, உடலால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததால் கொழுப்புச்சத்து குறைந்து உடல் எடை குறைதல்.

பார்வை கோளாறு (Vision problems)

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது கண்பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் மூக்கு கண்ணாடியை அடிக்கடி மாற்றக்கூடிய சூழல் உருவாகும்.

சரும பாதிப்பு (Skin discoloration)

உடலில் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில், நிறம் மாறி கருமையாக மாறுதல். இதுவும் இன்சுலின் சுரப்பதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் விளைவால் உண்டாகும்.

குணமாவதில் தாமதம் (Delayed healing)

காயங்கள் மற்றும் நோய் தொற்று குணமாவதில் தாமதம் ஏற்படும்.

பசி அதிகரித்தல் (Increased hunger)

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை, சக்தியாக மாற்ற உடல் தவறுவதால், பசி அதிகரிக்கிறது.

இது போன்ற அறிகுறிகள் நமக்கு ஏற்பட்டால் நன்கு கவனித்துவந்து, உடனடியாக மருத்துவரை அனுகவேண்டும். ஏனெனில், நீரழிவு நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் சிறுநீரகோளாறு, இதயம் சார்ந்த நோய்கள், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே அறிகுறிகளை வைத்து உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்தன் மூலம் நீரழியுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு பெரும் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க..

சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!

மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)