1. வாழ்வும் நலமும்

மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit : Jakarta post

யோகாசனங்கள் என்பது நம் உடலையும் மனதயும் புத்துணச்சியோடு வைக்க உதவி செய்கிறது. உடற்பயிற்சி, மன பயிற்சி, மூச்சு பயிற்சி என வகை படுத்தலாம். ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் நன்மை தரும் அருமருந்து யோகாசனங்கள். நம் உடம்புக்குள்ளே அமைந்துள்ள ஜீவாதாரமான சுரப்பிகள் சீராக இயங்கவும், அவை நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோடு உழைக்கவும் ஆசனப்பயிற்சி வகைசெய்கின்றது. 

பத்மாசனம் ( Padmasana)

யோகாசனங்களில் (Yogasanam) மிக முக்கியமான ஒரு ஆசனம் பத்மாசனம். பத்மம் என்றால் தாமரையை குறிக்கும் கமலம் என்றாலும் தாமரையை தான் குறிக்கும் எனவே தான் இந்த ஆசனம் பத்மாசனம் என்றும் கமலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்காமலும் செய்யலாம். சாதாரணமாக படித்து கொண்டிருக்கும் நேரங்களில் கூட இந்த ஆசனத்தை செய்யலாம். ஆனால் சாப்பிடும் போது மட்டும் பத்மாசனத்தில் அமர கூடாது. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என பார்ப்போம்.

பத்மாசனம் செய்யும் முறை (Steps to do Padmasana)

சமதள தரையில் போர்வையை போட்டுக் கொள்ளலாம். போர்வையில் அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு கால்களும் அடிவயிற்றை ஒட்டினாற்போல் இருக்க வேண்டும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்களுடைய முழங்கால்கள் தரையில் படும்படி நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

அமரும் பொழுது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது நல்லது. பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொடுமாறு இருக்க வேண்டும். நமது எண்ணங்களை கட்டுப்படுத்தவே இந்த சின்முத்திரை.

இப்படி அமர்ந்த பிறகு கண்களை மூடி இஷ்டதெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்யலாம்.

Image credit : India tv news

பத்மாசனத்தின் நன்மைகள் (Benefits of Padmasana Yoga)

  • பத்மாசனம் செய்வது இடுப்பிற்கு நல்லது. இது உங்களுடைய இடுப்பு மற்றும் கணுக்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. இடுப்பு வலி இருப்பவர்கள் தொடர்ந்து பத்மாசனம் செய்து வந்தால் இடுப்புவலி மிகவிரைவில் குணமாகும்.

  • பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பவர்கள் பத்மாசனத்தை தொடர்ந்து செய்து வருவது நல்லது. இதனால் மனஅழுத்தம் குறைந்து மனம் லேசாகி மனநிம்மதி கிடைக்கும்.

  • இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த பத்மாசனத்தை தினமும் தொடர்ந்து செய்துவரும்பொழுது உங்களுடைய உடலில் உள்ள இரத்த ஓட்டமானது சீராகும்.

  • பத்மாசனம், மூளை நன்றாக செயல்பட உதவும், அது உங்களின் ஜீரன சக்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


பயிற்சி செய்யும் நேரம் (Timings to follow)

பத்மாசனத்தை நீங்கள் ஒரு நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை செய்யலாம். பத்மாசனம் ஆரம்பிக்கும் முதல் சில நாள்கள் ஒரு நிமிடத்திலிருந்து கால் அதிக வலி எடுக்காமல் இருக்கும் வரை செய்யலாம். எக்காரணம் கொண்டும் கால் வலிக்க வலிக்க வலியை பொறுத்து கொண்டு பத்மாசனம் செய்ய கூடாது.
அடுத்த பகுதியில் விரைவில் அடுத்த ஆசனத்துடன் சந்திப்போம்.. நன்றி வணக்கம்!

மேலும் படிக்க... 

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!


English Summary: Here are the healthy benefits of Doing Padmasana Yoga Published on: 02 July 2020, 07:30 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.