அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 April, 2022 5:10 PM IST
How to make shampoo naturally?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முடி பற்றிய கவலை பெரிதாக உள்ளது.  முடி உதிர்வது, முடி வளராமல் இருப்பது, முடி வெண்மை நிறமாக மாறுவது முதலான எண்ணற்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் செய்யும் தீர்வுகள் உள்ளன.

பொதுவாக முடி என்றாலே நீளமாக இருக்க வேண்டும். கருமையாக இருக்க வேண்டும்.  அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணற்ற ஆசைகள் பெண்களிடையே இருக்கின்றன.  அதிலும் குறிப்பாகக் கல்லூரிப் பெண்களிடையே இது போன்ற ஆசைகள் நிறையவே இருக்கின்றன.  அந்த ஆசையை எவ்வாறு நிறைவேற்றுவது, அதிலும் எந்த விதப் பக்க விளைவுகளும் இன்றி முடியை எவ்வாறு வளர்ப்பது என்று பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  அதற்கெல்லாம் சிறு தீர்வாகத் தான் இந்த குறிப்பு.

இயற்கையான முறையில் ஷாம்பூ செய்து தலைக்குப் பயன்படுத்தலாம்.   கடைகளில் கிடைக்கும் ஷாம்பூ-க்களில் வாசனைக்காக பல கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இதனால் நாளடைவில் அது முடிக்கே ஆபத்தாக முடிகின்றது.  எனவே, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டே வீட்டில் சாம்பூ செய்து பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் ஒரு ஸ்பூன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

  • செம்பருத்திப் பூ 5, செம்பருத்தி இலைகள் (தேவையான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • இரண்டு சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஷாம்பூ செய்முறை

செம்பருத்திப் பூ இதழ்கள், செம்பருத்தி இலைகள், ஊற வைத்த வெந்தயம், சின்ன வெங்காயம், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.  நல்ல பேஸ்ட் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி தலையில் அப்ளை செய்வது?      

                நன்கு அரைத்த செம்பருத்தி இலை பேஸ்ட்-ஐ தலையின் எல்லா பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.  முடியின் அடி முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளிலும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.  தேய்த்துவிட்டு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்துச் சிறிதுச் சிறிதாகத் தண்ணீர் விட்டுத் தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.  தண்ணீர் விட்டுத் தேய்க்கத் தேய்க்க ஸாம்பூ போல் நுரை வருவதைக் காணலாம்.  பின்னர், சீகைக்காய் தூள் வைத்து தலையைக் கழுவ வேண்டும். 

பயன்கள்

  • முடி பளப்பளப்புடன் இருப்பதைக் காணலாம்.

  • முடியின் நிறம் கருமையாக மாற்றம் அடையும்.

  • முடி வலிமை பெறும்.

  • தலை குளிர்ச்சி அடைவதால் முடி நன்கு வளரும்.

  • முடி உதிர்வது குறையும்.

மேலும் படிக்க..

முடி வலிமை பெற வேண்டுமா, விளக்கு எண்ணையை இவ்வாறு உபயோகிக்கவும்!

வாருங்கள் அனைத்து விதமான தலை முடி பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்

English Summary: How to make shampoo naturally?
Published on: 09 April 2022, 05:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now