Krishi Jagran Tamil
Menu Close Menu

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தலைமுடி வளர சிறந்த பலன் தரும் வைட்டமின் "இ"

Thursday, 25 April 2019 12:40 PM

நீண்ட கருமையான தலை முடிசுருளை, அடர்த்தி குறைந்த தலை முடிஏர்னெத்தி, வழுக்கை, சொட்டை, என்று தலை முடியில் இத்தனை வேறுபாடுகள். பெண்களில் சிலர் நீளமாக வைத்துக்கொள்ள ஆசை படுவார்கள், சிலர் குறைவாக ஆனால் ஆண்களில் தலையில் முடி இருந்தால்  போதும் என்ற எண்ணம் மட்டும் உண்டு. நம் தலை முடியை பராமரிக்க மற்றும் வளர்க்க நம்மால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருப்போம். அது கடினமோ, எளிதோ தெரிந்தவர்களிடம், அம்மா, பக்கத்து வீட்டில் என ஆலோசனை  கேட்டு முடிந்ததை முயற்சித்திருப்போம். தலைமுடி கொட்டுவது அதிகரித்தால் நாம் எதையோ இழந்தது போல சுறுசுறுப்பு, ஆர்வம், உற்சாகம் குறைத்தது போல உணர்வோம். இதற்க்கு எப்படியாவது தீர்வு கண்டு பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். சிலர் தினமும் தலைக்கு என்னை தேய்ப்பார்கள் சிலர் என்றைக்காவது, சிலர் அதுகூட இல்லாமல் தலைக்கு என்னை சிறிதளவு கூட வைக்க மாட்டார்கள்.

எளிய முறையில் தலை முடி வளர்க்க ஈஸியான டிப்:

நம் பாட்டி தாத்தாக்கள் காலங்களில் தலை முடிக்கு தேங்காய் என்னை மாட்டே இருந்தது, இன்றைய காலத்தில் தலை முடிக்கு விதவிதமான  எண்ணெய்கள் வந்துவிட்டன. ஆனால் இன்றைக்கும் சிறந்ததாக இருப்பது தேங்காய் என்னை.

பயன்படுத்தும் முறை :

ஒரு கிண்ணத்தில் ஐந்து அல்லது  ஏழு ஸ்பூன் அளவில் தேங்காய் என்னை, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெளக்கெண்ணெய் மற்றும் ஒரு டியூப் இந்த வைட்டமின் "இ" மருந்து மூன்றையும்  நன்றாக மிஸ் செய்து தலையின் வேர்களில் நன்றாக தடவி பத்து நிமிடமாவது மசாஜ் கொடுக்க வேண்டும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கொண்டு தலையை கழுவிடலாம். இரவில் தடவி வைத்துவிட்டு காலையில் குளிக்கலாம் அல்லது காலையில் தடவினால் முடிந்த அளவு இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம். மருந்து பயன்படுத்துவதால் இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  பயன்படுத்தி வரவேண்டும் இப்படி தொடர்ந்த செய்து வந்தால் இரண்டு மாதத்திலேயே உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

இரண்டாவது நிறைய பேருக்கு முன் நெற்றியில் முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டிக்கொண்டே இருக்கும் நிலையில்  ஆண்களும்  சேரி பெண்களும் சேரி நெற்றியில்  சொட்டை ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள் மேலும் தங்கள் முகம் மாறி அழகு குறைவதை மன அளவில் கொண்டு வருந்திக்கொண்டே இருப்பார்கள். இதற்கும் இந்த வைட்டமின் இ பயன்பாடு சிறந்ததாக இருக்கிறது. இதற்க்கு இரண்டு ஸ்பூன் தேங்காய் என்னை, ஒரு ஸ்பூன் வெளக்கெண்ணெய், மற்றும் ஒரு வைட்டமின் "இ" டியூப் மூன்றையும்  நன்றாக கலந்து முடி அதிகமாக கொட்டி இருக்கும் இடத்தில தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் மேல் குறிப்பில் சொன்னது போல இதையும் அதே முறையில் நேரம் பார்த்து தலையயை கழுவிடலாம்.

எந்த செயலுக்கும் முக்கியமானது பொறுமை ,அதனால் இந்த முறையை பொறுமையுடன் தொடர்ந்து பயன் படுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

வைட்டமின் "இ" மருந்து பயன் படுத்துவதால்  இது தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, எரிச்சல், தலையில் உள்ள புன், ஆகியதை குறைத்து முடி வெடிப்பதை  சரி செய்து  தலை முடி வேகமாகவும் நீளமாகவும்  வளர, சிறந்த முறையில் உதவிகிறது.

vitamin E capsule, hair growth, benefits, hair loss, quick result
English Summary: For both Men and Women vitamin E capsule is more beneficial and effective for Hair growth

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. ஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்
  2. கரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா? அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்?
  3. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை
  4. ஜீரண கோளாறா? நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு
  5. கரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
  6. கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
  7. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  8. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  9. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  10. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.