மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 July, 2021 6:59 PM IST
Kadugin gunangal

கடுகு

ஏராளமான மருத்துவ குணங்கள் கடுகில் காணப்படுகிறது. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்கள் முதல் இடம் கடுகிற்கு உள்ளது. அதனால் தான் குழம்பு வகைகளிலும் பதார்த்தங்களிலும் தாளித்து பயன்படுத்துகிறோம்.

கடுகின் வகைகள்

கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என வகைகள் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்படுகிறது. கருங்கடுகில் காரம் அதிகமாகவே காணப்படும்.

கடுகின் குணங்கள்

இருமலுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். கடுகு காரம் மிக்கது அதனால்  உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். கடுக்குக்கு தனி சுவை என்று இல்லை. தாளிக்கவும் வாசனைக்காகவும் பயன்படுத்தலாம்.

கடுகில் உள்ள சத்துக்கள்

கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, செலினியம், மெக்னீசியம், புரதச்சத்து, நார்ச்சத்து கொண்டவை. மேலும் தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், போலேட்ஸ், நியாசின்,  பான்டோ தெனிக் அமிலம் ஆகிய பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உள்ளன.

கடுகின் மருத்துவ பயன்கள்

கட்டிகள் கரையும்

கோடை காலங்களில் பலருக்கு உடலில் கட்டிகள் ஏற்படும் அந்த நேரத்தில் கடுகை அரைத்து பூசினால் சீக்கிரமாக கட்டி உடைந்து நிவாரணம் கிடைக்கும்.

 உடல் பருமன் குறையும்

கடுகு உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகுக்கிறது. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நார்சத்து கொண்டது. எடையை அதிகரிக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆற்றலை அதிகரிக்கும்.

எலும்புகள் உறுதியாகும்

நியாசின் என்ற வகை சத்து ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் மற்றும் தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவி ஆக இருக்கிறது.

மேலும் படிக்க: 

குறைந்து வரும் சமையல் எண்ணெய் விலை- நுகர்வோர் நிம்மதி!!

English Summary: Mustard used only for seasoning has medicinal properties unknown to us
Published on: 17 July 2021, 06:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now