எள் விதைகளில் நிறைந்திருக்கக் கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள். எள் விதைகளில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதோடு, மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றது.
எள் முக்கியமாக உணவுப் பொருட்களுக்குச் சுவை கூட்ட பயன்படுத்தப்படுன்கிறது. இருந்தபோதிலும், எள் விதைகளின் நன்மைகள் பன்மடங்கு உள்ளன. எள்ளில் மெத்தியோனைன், டிரிப்டோபன் ஆகியவை இருக்கின்றன. இவைக் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன எனக் கூறப்படுகிறது.
கருப்பு மற்றும் சிவப்பு எள் விதைகளில் இரும்புச் சத்து நிறைந்து இருக்கிறது. அதே சமயம் வெள்ளை எள் விதைகள் கால்சியத்தின் வளமான மூலமாக இருக்கிறது. அவை ரத்த சோகையினைத் தடுக்க உதவுகின்றன. எள் விதைகள் லெசித்தின் வளமான மூலமாக இருக்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதோடு, பாலூட்டும் தாய்மார்களின் பாலின் தரத்தினை மேம்படுத்த உதவுகிறது.
நாள்தோறும் உண்ணும் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுப்பொருளாக இது இருக்கிறது. உடலுக்குப் பல நன்மைகளைச் சேர்ப்பதற்கான சிறந்த தேர்வாக எள் இருக்கின்றது.
எள்ளில் இருந்துதான் நல்லெண்ணெய் ஆட்டி எடுக்கப்படுகிறது. இது இதயத்துக்கு மிக பலனுள்ளதாக இருக்கிறது. சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களில் எல்லாம் சிறந்த பலன் தரக்கூடிய எண்ணையாக நல்லெண்ணெய் இருக்கிறது. எனவே, எள் எடுத்துக்கொள்வதைப் போலவே நல்லெண்ணெயினையும் உணவில் சேகரித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
மஞ்சள் யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்? பயன்கள் என்ன?
தர்பூசணி நல்லதா? எப்படி நல்ல தர்பூசணியை கண்டுபிடிப்பது?