இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 October, 2021 10:09 AM IST

சீதாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, அஜீரணத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்வது, மழைக்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க உதவும்.

ஆரோக்கியத்திற்குப் பழங்கள் (Fruits for health)

நம்முடைய அன்றாட உணவுகளுடன் பருவகால மற்றும் உள்ளூர் பழங்களை சேர்க்க வேண்டும் என உணவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதை நம்மில் பலர் தவிர்த்தே வருகிறோம். இது போன்ற பழங்களை நாம் கட்டாயம் சாப்பிடவேண்டியக் காட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் மழைக்காலம் நோய்களை அதிகம் கொண்டுவரும் என்பதால், இதனைக் கருத்தில்கொண்டு, பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் குறிப்பாக, பருவ கால பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தை முயற்சிக்கலாம். .

இனிப்புச் சுவை (Sweet taste)

இந்த இலையுதிர் காலத்தில் பரவலாகக் கிடைக்க கூடிய பழ வகைகளில் சீதாப் பழமும் ஒன்று. மகாராஷ்டிராவில் அதிகம் பயிரப்படும் இந்த பச்சை நிற பழம் அன்னாசி மற்றும் வாழைப்பழம் போன்ற ஒரு இனிமையான சுவை கொண்டது.

ஏன் சாப்பிட வேண்டும்? (Why eat?)

  • சீதாப் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

  • சீதாப்பழம் வைட்டமின் பி 6 நிறைந்த பழம் ஆகும். இதைச் சாப்பிடுவது வீக்கம் மற்றும் பிஎம்எஸ் (மாதவிடாய் முன் நோய்க்குறி) ஆகிய நோய்களை குணப்படுத்த உதவும்.

  • நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டால், இந்தப் பழம் நல்லப் பலனை அளிக்கும்.

  • சீதாப்பழம் அதிக உணவு நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். அதே வேளையில், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

மருத்துவ நன்மைகள்? (Medical benefits?)

  • சீதாப்பழம் உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

  • சீதாப் பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன.

  • கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இவை நன்மை பயக்கும்.

  • இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

  • அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது

  • சீதாப் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

தகவல்
முன்முன் கணேரிவால்
ஊட்டச்சத்து நிபுணர் 

மேலும் படிக்க...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: Sita fruit boosts immunity! Suitable for rainy season
Published on: 17 October 2021, 12:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now