மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 June, 2021 2:08 PM IST
murangai

பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பச்சை  கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம்,மேக்னிசியம், பொட்டாசியம்,   நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோடின் நிறைந்துள்ளன.

அதிலும் முருங்கைக்கீரை,அதிகம் சத்துக்கள் நிறைந்த பச்சை கீரைகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் வருகிறது. 

முருங்கைக் கீரையில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க  மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,  செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. 

குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் நிறமி அதிகளவு இருப்பதால், முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது.

முருங்கைக் கீரையை வாரத்தில் இரு முறை சாப்பிட்டால், எலும்பு, பற்கள் வலுப்பெறும், ரத்தசோகைக் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்தாகவும் கருதப்படுகிறது.

உடல் சூட்டை தணிக்கும் முருங்கைக் கீரை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி மாயமாய் மறையும். உடம்பு வலி ,கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும் முருங்கைக்கீரையை பொரியலாக செய்து சாப்பிடலாம்.

பார்வைத்திறனை சீராக்கும் முருங்கைக்கீரை, செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகிய பிற பிரச்சனைகளையும் சீராக்குகிறது.

ஆயுர்வேதம் மருந்துகளில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் முருங்கைக்கீரையின் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்தால், பொடுகுப் பிரச்னை குறையும்.

முருங்கையில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. முருங்கைக்கீரையை காயவைத்து பொடியாக பயன்படுத்தலாம்.மற்றும் முருங்கைக்காய் விதைகளுக்கு மருத்துவ குணங்கள் உண்டு.

மேலும் படிக்க

சிறுநீரக கற்களை வெளியேற்றும் மகத்தான மருந்து "வாழைத்தண்டு"

கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்! தெரிஞ்சிக்கலாம் வாங்க

துவரையின் மருத்துவ பயன்கள்

English Summary: So many benefits of drumstick leaves or murangai
Published on: 28 June 2021, 02:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now