Krishi Jagran Tamil
Menu Close Menu

துவரையின் மருத்துவ பயன்கள்

Thursday, 08 November 2018 04:46 PM

துவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • துவரையில் பி-த்தொகுப்பு விட்டமின்களான பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுக்கள்) அதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), சி, கே, சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.
  • இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.
  • மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.

 மருத்துவப் பண்புகள்

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க

  • துவரையில் உள்ள பொட்டாசியமானது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கிறது. எனவே துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

  • துவரையானது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
  • காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரையை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.

அனீமியாவைத் தடுக்க

  • ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் அனீமியா மற்றும் பிறப்புக்குறைபாடுகள் தோன்றலாம். துவரையானது அபரிதமான ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு அனீமியாவை விரட்டலாம்.

எதிர்ப்பு அழற்சி பண்புகள்

  • துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகின்றது.

ஆரோக்கியமான உடல்எடை இழப்பிற்கு

  • துவரையானது குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்துவதுடன் உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.
  • துவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடைசெய்கின்றது.

ஆற்றலினைப் பெற

  • துவரையில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் பி3 (நியாசின்) போன்றவை கார்போஹைட்ரேட்டின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
  • கொழுப்பு ஆற்றல் சேமிப்பதைத் தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
  • வறண்ட பகுதிகளில் வேலைசெய்பவர்கள் ஆற்றலை விரைவில் இழந்து விடுவர். அவர்களுக்கு துவரை நல்ல பலனைக் கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலைப்பெற

  • துவரையில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதயநலத்தை மேம்படுத்த

  • துவரையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.

செரிமானத்தை மேம்படுத்த

  • துவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றம் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
Red Gram- Health benefits
English Summary: Health benefits of Red gram

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!
  2. தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
  3. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!
  4. ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!
  5. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு!
  6. நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு!
  7. விலை உயர்ந்தால் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்! - அமைச்சர் காமராஜ் ஐடியா!
  8. வட தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கன மழை இருக்கும்!!
  9. மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!
  10. குளிருக்கு ஏற்ற இயற்கை குடில்- பாரம்பரிய உணவுகளையும் ருசிக்கலாம் வாங்க!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.