1. வாழ்வும் நலமும்

சிறுநீரக கற்களை வெளியேற்றும் மகத்தான மருந்து "வாழைத்தண்டு"

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : Boldsky

வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களை வாழைத்தண்டு கொண்டிருக்கிறது.

இன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.

மது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

 சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

 வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

 வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. அதனால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறையும்.

தொப்பையைக் குறைக்க

நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை வந்தால், நல்ல பலன் கிடைக்கப் பெறலாம்.

அசிடிட்டி

சிலருக்கு லேசான உணவுகள் சாப்பிட்டாலும், சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆவதில்லை. அடிக்கடி ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ, சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால், உணவு ஜீரணமாவதற்கான அமிலங்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உணவு செரிமானச் சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த

 வாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள துவர்ப்பு சுவை தான் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்தாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்தசோகையைக் குணமாக்க

 கீரை, பேரிச்சம்பழம், முருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.

சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்த

சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.

வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.  வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லதுஎலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு  சாறு உதவும்.

மேலும் படிக்க...

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Medicinal uses of Banana Stem

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.