காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பலர் சொல்லி கேட்டுயிருப்பீர்கள், ஆனால் அதை கடைப்பிடித்தீர்களா என்றால், நம்மில் பாதிப்பேர் கூட, இதை செய்வதில்லை. இதில் பல நன்மைகள் இருக்கின்றன, இந்தப் பதிவில் அதை பட்டியிலிட்டுள்ளோம்.
அதன்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது முற்றிலும் உண்மையாகும். நெல்லிக்காய் சாப்பிட்டால் ரத்தசோகை நீங்கும், நெல்லியின் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவுகிறது. குறிப்பாக, இது நமது உடல் எடையை குறைக்க உதவும். எனவே நெல்லிக்காயுடன் Detoxide ட்ரின்க் பண்புகள் பற்றி பார்ப்போம்.
நெல்லியின் பண்புகள் (Properties of Gooseberry):
பொதுவாக நெல்லிக்காய் Vitamin C-யின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, Vitamin - A, பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் பண்புகள் நெல்லியில் காணப்படுகின்றன. அதனால் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி, பல நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைத் தடுக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், இது உதவுகிறது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: கப் ரவை அவல் இருந்தா மழைக்கான சூப்பர் ஸ்னாக்ஸ் தயார் செய்திடலாம்!
உடல் எடை கட்டுப்படுத்த எவ்வாறு உதவும்:
உடல் ஸ்லிம்மாக இருக்க பலர் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கிறார்கள். அதன்படி உங்களின் அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டுமானாலும், காலையில் வெறும் வயிற்றில் நெல்லியின் ஜூஸை குடிக்கலாம் நல்ல பயன் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை விளக்கம்:
- முதலில் 3 நெல்லி எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின்னர், வெள்ளரியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும்.
- இப்போது ஜூஸ் அடிக்கும் மிக்சி அல்லது வெறும் மிக்சி எடுத்து அதில் முதலில் நறுக்கிய நெல்லி, அத்துடன் வெள்ளரியை சேர்க்கவும்.
- இவற்றோடு இஞ்சி மற்றும் பிழிந்த எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- பின்னர் இவற்றில் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு வடிகட்டியால் வடிகட்டவும்.
- வடிகட்டிய சாற்றுடன் தேன் கலந்து பருகவும்.
நம் அனைவரும் அறிவோம், தேன் உடல் எடை குறைவில் நல்ல பயனளிக்கும், எனவே சர்க்கரையை தவிர்த்து, தேன் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க:
PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?