இஞ்சி இந்திய சமையலறைகளில் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். அதன் பயன்பாடு மசாலா, மருத்துவ மூலிகை மற்றும் வீட்டு வைத்தியம் என அனைத்திற்கும் உள்ளடங்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும், வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கவும் இஞ்சி பயன்படுகிறது.
ஒரு நபரின் எடை அல்லது பிஎம்ஐ குறைப்பதில் இஞ்சி பெரிதளவும் உதவுகிறது. இஞ்சி எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும். அத்தகைய இஞ்சியை உடல் ஆரோக்கியத்திற்கான ஒன்றாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
இஞ்சி நீர்: ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் இஞ்சி சாற்றை சேர்த்து காலையில் குடித்து வந்தால் அல்லது நாள் முழுவதும் பருகினால் கொழுப்பு எரிக்கப்படும் என்று கூறுகின்றனர். சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து அதன் சுவையை மேம்படுத்தலாம்.
இஞ்சி தூள்: எடை இழப்புக்கு உலர்ந்த இஞ்சி தூள் மிகவும் பிரபலமானது. எடை குறைக்கும் பண்புகளைத் தவிர, இந்த பொடிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இஞ்சி பொடியை தண்ணீருடன் உட்கொள்ளலாம் அல்லது இதை உணவில் சேர்த்து நேரடியாக சாப்பிடலாம்.
இஞ்சி தேநீர்: பல வீடுகளில் இஞ்சி தேநீர் காலையிலும் மாலையிலும் வழக்கமாக இருக்கும். தேநீரில் இஞ்சியின் ஆரோக்கியமான பொருட்களைச் சேர்க்க, நீங்கள் தேநீரில் சில துளிகள் இஞ்சிச் சாற்றைப் பிழியலாம் அல்லது சில துண்டுகளைச் சேர்க்கலாம். தேநீருடன் சரியாக காய்ச்சி சூடாக பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி எலுமிச்சை தண்ணீர்: இந்த இரண்டு சக்தி வாய்ந்த மசாலாப் பொருட்களையும் கலப்பது கூடுதல் எடையில் அற்புதமாக வேலை செய்யும் என்று பலர் நம்புகிறார்கள். எடையைக் குறைக்கப் பயன்படும் உணவுகளில் எலுமிச்சையும் ஒன்று. குடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற அதிகாலையில் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
இஞ்சி மிட்டாய்கள்: இஞ்சியை தடிமனான துண்டுகளாக வெட்டி இஞ்சி மிட்டாய்களை தயார் செய்யலாம். இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் கருப்பு மிளகு தூள், ஆம்சூர் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கலவையை சிறிது நேரம் உட்கார வைக்கவும். பின்னர் அவற்றை சூரிய ஒளியில் உலர வைத்து இஞ்சி மிட்டாய்களாக உண்ணலாம் எனக் கூறப்படுகிறது.
குறிப்பு: எந்தவொரு மருத்துவப் பலன்களை எங்கு கண்டாலும், எவர் கூறினாலும் அதை அப்படியே செய்து கொள்வதை விடுத்து தங்களது உடலுக்கு எவை ஏற்றவை என்பதை அறிந்து அதன்பின்பு உட்கொள்வது நல்லது. மேலும், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனைக்குப் பின்பு எடுத்துக்கொள்வது மேலும் நல்லது.
மேலும் படிக்க
20% அதிக விற்பனை! தக்காளி ரூ.60க்கு கிடைப்பதால் குவியும் மக்கள்!
NABARD Bank: கிராம மக்களுக்கு உதவும் வங்கி! தனது 42 வயதைக் கடந்தது!