கொடைக்காலத்தில் மாலை நேரத்திற்கான சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் வாருங்கள் பார்ப்போம். இந்த ஸ்நாக்ஸ் செய்ய நீங்கள், பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டாம். எளிதாக, மரவள்ளி கிழங்கு வைத்து, ஒரு சிறப்பான ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மரவள்ளி கிழங்கு எடுத்து நன்றாக கழுவிய பின், குக்கரில் ஒன்றிலிருந்து இரண்டு வீசில் வைக்க வேண்டும். நன்றாக வெந்த மரவள்ளி கிழங்கில் இருந்து தோலை நீக்கி விட்டு, மசித்துக்கொள்ள வேண்டும். நன்றாக மசித்த கிழங்குடன் 100 கிராம் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன்,
1/2 டீ ஸ்பூன்: மஞ்சள் தூள்
1/2 டீ ஸ்பூன்: சில்லி ஃபேளக்ஸ் (Chilly Flakes)
1/2 டீ ஸ்பூன்: கரம் மசாலா
1/2 டீ ஸ்பூன்: சாட் மசாலா (Chat Masala)
1/2 டீ ஸ்பூன்: இஞ்சி பூண்டு பேஸ்ட்
தேவைக்கேற்ப: உப்பு
இவை அனைத்தையும் நன்றாக கலந்துக்கொள்ளவும். கிட்டதட்ட சப்பாத்தி மாவுபோல் கலந்துக்கொள்ளவும். அதன் பிறகு, நீண்ட வாக்கில் சிலிண்டிரிகல் ஷேப்பில் உருட்டி கொள்ளவும். இதன் பிறகு, ஒரு முட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?
காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?
இதன் பிறகு உருட்டி வைத்திருக்கும், மரவள்ளி கிழங்கை, முட்டையில் முக்கி, அதன் பிறகு ப்ரேட் கிரம்ப்ஸில் போட்டு எடுத்து, சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் வானலியில் இருந்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான மரவள்ளி கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். சூடாக பரிமாறுங்கள்.
மேலும் படிக்க:
அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும்?
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்