இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இல்லாதவர்களாக மாற முடியுமா? என்றக் கேள்வியும் மறுபுறம் எழாமல் இல்லை.
இது சாத்தியமா?
அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இது சாத்தியம் அல்ல. 5 முதல் 10 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் 10 சதவீதம் நோயின் தன்மையைக் குறைக்க முடியும். மருந்துகளுக்கான தேவையைக் குறைக்க முடியும்.
2 வகை
சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை. மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை. இதில் 2-வது இன்சுலின் செயல்படாத தன்மை இருப்பவர்களுக்கு உடல்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நேரம் தவறாமை உணவு உட்கொள்ளுதல் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை மிகவும் குறைக்க முடியும். கண்மூடித்தனமாக தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, இன்சுலினை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது
எச்சரிக்கை
அன்மைக்காலத்தில் நிறைய சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட்டு, பிற மருத்துவமுறைகளை செய்து சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்க்க வேண்டிய கட்டாயமாகிறது. சர்க்கரை மருந்து, மாத்திரைகளை வேற எந்த மருந்துகளுடனும் எடுத்து கொள்ளலாம்..
தகவல்
டாக்டர் S.கோகுலரமணன் பேட்டி
ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர்
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!