1. வாழ்வும் நலமும்

PM-kisan 13-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த வாரம் விடுவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
- this week release for farmers!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியின் 13-வது தவணை இந்த வாரம்  விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.6,000

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

12ஆவது தவணை

ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12-வது தவணைத் தொகையைக் கடந்த அக்டோபர் மாதம்   பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

13-வது தவணை

இந்தத் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகை அடுத்த வாரம் விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது.

மோசடி

 இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்றவர்கள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

என்ன செய்யவேண்டும்?

  • முதலில் உங்களுடைய கணக்கில் பணம்வந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
  • ஒருவேளை சில காரணங்களுக்காக பணம் வராமல் போகலாம். அதுகுறித்த நிலவரத்தை பிஎம் கிசான் இணையதளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.
  • முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்குள் செல்லவும்.
  • அதன் பிறகு, பயனாளியின் நிலையை (BeneficiaryStatus.aspx) கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடையள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: PM-kisan 13th instalment- this week release for farmers!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.