பல் கூச்சம் நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய மற்றும் அசௌகர்யமான பிரச்சனையாகும். அவ்வாறு பல் கூச்சம் ஏற்படும்போது, உடனே மருத்துவரை நாடுவது, சிரமம். பின்பு என்ன செய்வது, இதற்கு வழி தான் என்ன, என்றால் அதற்கு வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து, உடனடி நிவாரணம் காணவும் வழி உள்ளது. அவை எவை கீழே காணுங்கள்.
பல் வழியின் காரணங்கள்
பல் வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்குவதும் பிரச்சனையில் முடியும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படும் அதிக வாய்ப்பிருக்கிறது. நம்மில் பலருக்கு, இனிப்பாகவோ, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு ஐஸ்கீரிம், சாக்லேட் போன்றவை பல் கூச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை ஏற்கெனவே பல் சொத்தை ஏற்பட்டு, அந்த சொத்தையை நீக்கி, அடைத்திருப்பார்கள். அந்த அடைப்பு உடைந்திருந்தால் கூட பல் கூச்சம் ஏற்படலாம்.
இன்னும், சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை மற்றும் உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் பட்சத்தில், அமில சுரப்பு காரணமாக பல் கூச்சம் ஏற்படலாம்.
முழுவதுமாக, இந்த பல் பிரச்சனையை தீர்க்க மருத்துவரையே நாடவும். உடனடி நிவாரணம் பெற சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி பயனடையலாம்.
உப்பு தண்ணீரில் கொப்பளிப்பது நல்ல நிவாரணியாகும்:
வாய் கொப்பிளிப்பது ஆங்கிலத்தில் (gargle) எனப்படும். இந்த பற்கூச்சப் பிரச்சனைக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய சிகிச்சை முறை இதுவாகும். தினமும் இரண்டு முறை வாயை உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாயின் ஆரோக்கியம் மேம்படும் என்பது குறிப்பிடதக்கது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில், அரை தேக்கரண்டி உப்பு கலக்கவும். இந்தக் கலவையை 30 விநாடிகளாவது வாயில் வைத்து கொப்பளித்து வருவது நல்ல பலனை அளித்திடும்.
கிராம்பு:
கிராம்பை நசுக்கி அதை பற்கூச்சம் உள்ள இடத்தில் வைத்தால், நல்ல நிவாரணம் பெறலாம். இது நம் முன்னோர்களின் வைத்திய முறையில் ஒன்றாகும்.
தேனால் கொப்பளிப்பதும் நல்ல நிவாரணம்தான்:
பற்கூச்சம் நீக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்தால் நல்ல பயன் கிடைக்கும். தேனில் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் பண்பு உள்ளது. எனவே, தேன் நல்ல வலி நிவாரணியும் கூட. பாட்டி வைத்தியத்தில், தீக்காயங்களில், சிராய்ப்புகளில் மருந்துகளை, தேனில் குழைத்துப் போடுவதை நாம் பார்த்திருப்போம்.
உப்பும் மஞ்சளும் கொண்டு பல் துலக்கலாம்:
மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புள்ள பொருள். இதை தூள் உப்புடன் சேர்த்து தொடர்ந்து பற்களை தேய்த்து, மசாஜ் பண்ணுவதுபோல் தேய்க்க வேண்டியது முக்கியமாகும். அவ்வாறு தேய்த்து வந்தால் பற்கூச்சம் நீங்கும் என்பது குறிப்பிடதக்கது. 1 டீ ஸ்பூன் மஞ்சள், அதில் 1/2 டீ ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் தயார் செய்துக்கொள்ளவும்.
கிரீன் டீ (Green Tea)யிலும் கொப்பளிப்பது நன்மை பயக்கும்:
உப்பு நீர், தேன் கலந்த நீர் மட்டுமல்ல க்ரீன் டீயிலும் வாயை கொப்பளிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இது ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது சிறப்பாகும். க்ரீன் டீயை மவுத் வாஷ் போல் ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தி வரலாம்.
இந்த ஐந்து டிப்ஸும் நல்ல நிவாரணிகளாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம், இவை தற்காலிக நிவாரணிகள் மட்டுமே, முழுமையாக நிவாரணம் பெற மருத்துவரை அணுகவதே சிறந்ததாகும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
PM Kisan Yojana: விரைவில் 11வது தவணை; விவரங்கள் உள்ளே
ஏர்டெல்லில் முதலீடு செய்யும் கூகுள்: நிறுவனங்களின் இலக்கு என்ன?