PM Kisan Yojana: விரைவில் 11வது தவணை; விவரங்கள் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
PM Kisan Yojana: 11th installment coming soon; Details inside

PM Kisan Latest Update: பிரதமர் நரேந்திர மோடி 10வது தவணையாக ரூ. 2000-த்தை வெற்றிகரமாக, விவசாயிகளின் கணக்குகளில் செலுத்திவிட்டார். PM கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2000 ஜனவரி 1, 2022 அன்று விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. அந்த வகையில் 11வது தவணை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு முன்னர், பிஎம் கிசான் திட்டத்தில், உங்கள் நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

பிஎம்-கிசான் என்று பிரபலமாக அறியப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 நிதியுதவி தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்தத் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்த திட்டம், கொரோனா காலகட்டத்தில், விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

PM கிசான் 11 வது தவணை தேதி (PM Kisan 11th installment date)

பிஎம் கிசான் 10வது தவணை ஜனவரி முதல் வாரத்தில் வந்தது, இதன்படி ஏப்ரல் முதல் வாரத்திற்குள் விவசாயிகளின் கணக்கில் 11வது தவணையும் வர வாய்ப்புள்ளது. அதைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள, முதலில் உங்கள் நிலையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். அதற்கான வழி தெரிந்துக்கொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 8000 வரலாம் என மதிப்பிடப்படுகிறது (It is estimated that Rs.8000 may come)

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தி, பட்ஜெட்டில் அரசு அறிவிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2022 அன்று அறிவிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

உங்கள் நிலை மற்றும் கணக்கு விவரங்களை எவ்வாறு சரிபார்க்க வேண்டும்:(How to check your status and account details)

PM Kisan-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் விவசாயிகள் கார்னரை, பார்க்க முடியும்.

இப்போது பயனாளி நிலை என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மூன்று எண்கள் மூலம் உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம்.

பின்னர் தரவு பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.

அனைத்து பரிவர்த்தனை தகவல்களையும் பெறுவீர்கள் - உங்கள் கணக்கில் தவணை எப்போது வந்தது மற்றும் எந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 9வது மற்றும் 8வது தவணை தொடர்பான தகவல்களையும் இங்கே நீங்கள் பெறுவீர்கள்.

FTO உருவாக்கப்பட்டு, பேமெண்ட் உறுதிப்படுத்தல் நிலுவையில் இருப்பதைக் கண்டால், உங்கள் தொகை செயலாக்கப்படுகிறது என்று அர்த்தம்.

PM கிசான் தவணை விவரங்கள் (PM Kisan Installment Details)

  1. 10வது தவணை ஜனவரி 1, 2022 அன்று வந்தது.
  2. 9வது தவணை ஆகஸ்ட் 2021 இல் வெளியிடப்பட்டது.
  3. 8வது தவணை மே 14, 2021 அன்று வழங்கப்பட்டது
  4. திட்டத்தின் கீழ் 7வது தவணை டிசம்பர் 25, 2020 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

அடல் பென்ஷன் யோஜனா: தம்பதிகளுக்கான சிறப்பு திட்டமாகும்

வாகனம் வைத்திருப்பவர்களே கவனம் PUC சான்றிதழ் இல்லாமல் பெட்ரோல் கிடைக்காதாம்!

English Summary: PM Kisan Yojana: 11th installment coming soon; Details inside Published on: 29 January 2022, 03:30 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.