நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல், நம்மையும் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தை நம்மில் விதைக்காமல் இல்லை.
நம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தால்தான் இந்த வைரஸால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதே உண்மை. இதைத்தான் மருத்துவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
எனவே எதிர்ப்புச்சக்தி குறையாமல் இருக்க என்ன செய்வது என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI( Food Safety and Standards Authority of India ) வைட்டமின்-C அதிகம் உள்ள உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதால், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி அதிகரித்துக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
FSSAI வெளிட்டுள்ள வழிகாட்டுதல்கள்
பின்வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது.
ஆரஞ்சு (Orange)
வைட்டமின் C அதிகம் உள்ள ஆரஞ்சு, நோய் எதிர்ப்புச்சக்தி அளவை உடலில் அதிகரிப்பதுடன், சருமத்திற்கும் ஏற்றது. எனவே தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
நெல்லிக்காய் (Amla)
இன்டியன் கோஸ்பெரி எனப்படும் நெல்லிக்காய் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.
பப்பாளி (Pappaya)
அதிக நார்ச்சத்து கொண்ட அதேநேரத்தில் குறைந்த கலோரிகளைக் கொண்ட பப்பாளிப்பழம், அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின் C அதிகமுள்ள இந்த பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதில் சிறந்தது.
குடமிளகாய்
குடமிளகாயில் வைட்டமின் C,E,A மற்றும் நார்ச்சத்துகள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் பார்வையை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில், பொட்டாசியம் சத்தும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்து, இதய ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் வலிகளுக்கும் தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் தூண்டுகிறது.
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழங்களை நம் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது, உடல் எடைக்குறைப்பு உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில், இதய ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடுவதுடன், அஜீரண பிரச்னைக்கும் தீர்வாக அமைகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கிறது.
மேலும் படிக்க...
முள்ளங்கிக்கு விலை கிடைக்கவில்லை- சாலையில் கொட்டப்படும் அவலம்!
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!