Krishi Jagran Tamil
Menu Close Menu

சானிடைசர் உபயோகிப்பவரா நீங்கள்? சில விஷயங்களைக் கடைப்பிடிக்காவிட்டால் விளைவுகள் விபரீதம்

Saturday, 11 July 2020 04:49 PM , by: Elavarse Sivakumar

Image credit :

கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லமுடியாது என்ற இக்கட்டான சூழ்நிலை தற்போது நம்மைக் கடந்து செல்கிறது.

சமீபத்தில் புதிதாகத் தோன்றிய இந்த பழக்கம், இனிமேல் ஆடைவாங்கச் செல்லும்போது, உடைக்கு மேட்சாக மாஸ்க் என்னும் முகக்கவசத்தையும் (Mask) சேர்த்து வாங்கும் நிலைக்கும் நம்மை அழைத்துச் சென்றாலும் வியப்பில்லை.

இதேபோல் அக்கம்பக்கத்தார் வீட்டிற்கு சென்றால், முதலில் குடிக்கத் தண்ணீர் தரும் பழக்கம் மாறி, வந்தவருக்கு சானிடைசர் அடிக்கும் நிலை தற்போதே உருவாகிவிட்டது. இதற்காக விதவிதமாக சானிடைசர்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன.

ஏதோ மருந்து, மாத்திரை போலவும், அன்றாடம் வீடுகளுக்குப் பயன்படுத்தும் உணவுப்பொருட்களைப் போன்றும் மக்கள் சானிடைசர்களைக் கருதிக் கருதி வாங்கிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.

இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால், அலுவலகங்களில், சானிடைசர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்காக, மாதம் ஒரு தொகையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Image credit : Healthline

மருத்துவர்கள் அறிவுரை (Doctors Advice)

ஆனால், கைகளை சோப்பு மற்றும் தண்ணீரைக்கொண்டு கழுவுவதே சிறந்தது என்பதையே மருத்துவர்கள் ஊக்குவிக்கின்றனர். அதுதான் அவர்களது அறிவுரையும் கூட.

எனினும், சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் நாம் வேறு வழியில்லாமல், சானிடைசர்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகிவிட்டது. அதிலும் வீடுகளில் சானிடைசர்களின் பயன்பாடு, கடந்த 4 மாதங்களாக கணிசமாக அதிகரித்துவிட்டது.

ஆரோக்கியத்திற்கு கேடு (Health issues)

இருப்பினும், சானிடைசர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது, நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், நம்முடைய ஆரோக்கியத்தை பலவகைகளில் பாதிக்கக்கூடியது இந்த சானிடைசர் என்பதே உண்மை.

ட்ரைக்ளோசன் (Triclosan)

மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின்படி, கைக்கு பயன்படுத்தும் சானிடைசரில் 60 சதவீதம் ஆல்கஹால் இருக்க வேண்டும். இத்தனை சதவீதம் ஆல்கஹால் இருந்தால்தான், அந்த சானிடைசர் கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு நல்ல பலனளிக்கும்.

ஆனால் ஆல்கஹாலுக்கு பதிலாக ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் (Triclosan) கலந்த சானிடைசர்கள்தான் அதிகளவில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ட்ரைக்ளோசன் , பூச்சிக்கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ரசாயனம் ஆகும்.

எனவே இந்த சானிடைசரைப் பயன்படுத்தும்போது, அது உடனடியாக தோலில் ஊடுருவி, தைராய்டு சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், கல்லீரல் மற்றும் தசைகளில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தும்.

சானிடைசரைப் பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவற்றை இப்போது பார்ப்போம்.

உணவுக்கு முன்பு (Before food)

உணவு சாப்பிடும் முன்பு சானிடைசர் போட்டு கைகழுவுவது நல்லது என்று நம்மில் பலர் கருதுகிறார்கள்.  அதனால் எத்தனை ரசாயனங்கள் நம் உடலுக்குள் செல்கிறது என்பதை அவர்கள் யோசிக்க மறந்துவிடுகிறார்கள். சானிடைசர்களில் இடம்பெற்றுள்ள ஏராளமான ரசாயனங்கள், நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளை குறிவைத்துத் தாக்கி,வெகுவாக பாதிக்கும்.

எதிர்ப்பு சக்தி குறையும் (Immunity down)

கைகழுவப் பயன்படுத்தும் சானிடைசர்களைப் போட்டுக்கொண்டு குழந்தைகள் சாப்பிட நேர்ந்தால், அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பல்வேறு நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்தும் உருவாகும்.

Image credit : Ksl News radio

தீக்காயத்தை ஏற்படுத்தும் (Can cause burns)

சானிடைசர்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், தீக்காயங்களையும் ஏற்படுத்தும். சானிடைசர்களில் இடம்பெற்றுள்ள ஆல்கஹால், எளிதில் தீப்பற்றக்கூடியது. இதனை கையில் தேய்த்துக்கொண்டு நெருப்பின் அருகே சென்றால், கையில் தீக்காயம் ஏற்படும். குறிப்பாக சானிடைசரைக் கையில் போட்டுக்கொண்டு, தீபம் ஏற்றுவது, ஆரத்தி எடுப்பது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம்.

காரில் தவிர்ப்பது நல்லது (better to avoid in car)

காரில் சானிடைசரைப் பயன்படுத்தும்போது, அது சரியாக மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் சரியாக மூடப்படாத சானிடையர், ஆவியாகி, மிகப் பெரியத் தீவிபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து இருக்கிறது.

வாசனை சானிடைசர் (Sented Sanitizer)

நறுமணம் கமழும் வாசனை சானிடைசர்களை வாங்கிப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் நறுமணத்திற்காக அதில் பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் நச்சு வாயு, நம் உடலில் உள்ள சுரப்பிகளை பாதித்து மரபியல் மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.

பாதுகாப்பது எப்படி? (How to protect)

 • கைகளை சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

 • குழந்தைகள் பக்கம் இருந்து சானிடைசர்களை விலக்கி வைக்க வேண்டும்.

 • சானிடைசர்களை காற்றுப்புகாத பாட்டில்களில்தான் அடைக்க வேண்டும்.

 • குளிர்ச்சியான இடத்தில் சானிடைசர்களை வைக்க வேண்டும்.

 • சமையலறைக்கு சானிடைசர்களைக் கொண்டு செல்லவேக் கூடாது. அதேபோல் சமையல் செய்யச் செல்லும் முன்பும், கைகளில் சானிடைசர்களைப் பயன்படுத்தக் கூடாது.

மாஸ்க்கை சுத்தம் செய்தல் (Clean the mask)

முகத்திற்கு அணியும் முகக்கவசத்தை, சானிடைசரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது என சிலர் நினைக்கிறார்கள். அவ்வாறு சுத்தம் செய்வதால், சுவாச பிரச்சனைகள் மற்றும் வாந்தி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், சானிடைசர்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். இருப்பினும், கைகளைக் கழுவ, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதே நம்முடைய முதல் சாய்ஸ்-சாக (Choice) இருக்கட்டும். அதுவே ஆரோக்கியத்திற்குத் துணை நிற்கும்.

மேலும் படிக்க...

குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!

நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்...

சானிடைசர்களால் ஆபத்து சானிடைசர்- எச்சரிக்கை சானிடைசரில் கவனம் தேவை Hand sanitizer Sanitizer Harmful sanitizer Hand wash சானிடைசர்
English Summary: Few Things go wrong with your hand sanitizer

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. வருமானவரி கணக்கு தாக்கல் செய்யக் காலஅவகாசம்- நவம்பர் வரை நீட்டிப்பு!
 2. நோய்களைத் துவம்சம் செய்யும் நுண்ணுயிரிகள்!
 3. மேய்ச்சலுக்குத் தொடரும் தடை- மாடுகள் அழியும் அபாயம்!
 4. வாழையின் விலை இனி, உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!
 5. காரீப் சந்தைப் பருவத்திற்கு பருப்புகள், எண்ணெய் வித்துகள் கொள்முதல் -மத்திய அரசு ஒப்புதல்!
 6. இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!
 7. காந்தி ஜெயந்தி அன்று 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!
 8. அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
 9. PM KISAN முறைகேடு :மேலும் 4 பேர் கைது- வெளிமாநிலத்தவர் சேர்க்கப்பட்டிருப்பதும் அம்பலம்!
 10. மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.