இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 May, 2022 2:46 PM IST
Want to lose weight? Then drink enough water!

இன்று பலரின் கவலைகளில் முக்கியமான் கவலை என்பது உடல் எடை அதிகரிப்பு குறித்ததாக இருக்கிறது. எதை உண்டால் எடை குறையும். எந்த டயட்-ஐ பின்பற்றுவது என எண்ணற்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் உண்மையில் உடல் எடை குறைய தண்ணீரே போதும் என ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

அதிக எடை அனைவரையும் கவலையடையச் செய்கிறது. மெகா கலோரிகளை எரிக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் என அனைத்து வகையான சிக்கல்களுக்கும் மக்கள் பொதுவாக, நடைபயிற்சி, ஓடுதல், உடற்பயிற்சி செய்தல், கிக் பாக்ஸிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், தண்ணீரைக் குடிப்பதன் மூலம், எடையைக் குறைப்பது சாத்தியம் எனக் கூறப்படுகிறது.

தண்ணீரைக் குடிப்பதால் கலோரிகளை எரிப்பது சாத்தியமாகும் எனவும் கூறப்படுகிறது. உண்மையில், எட்டு கிலோமீட்டர் தூரம் ஜாகிங் செய்யும்போது எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை வெறும் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் எரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. எவ்வாறு எனில் தண்ணீர் குடிப்பதால் நாம் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இது எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. தண்ணீர் குடிப்பதால் கலோரிகளை எரிக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் சில வழிகள் கீழே கொடுக்கப்படுள்ளன.

உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. தண்ணீர் குடிப்பது கொழுப்பை எரிக்கவும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதேநேரம் தண்ணீர் குடிப்பது, மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கிறது. நாம் அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்கும்போது, எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இது பயனுள்ளதாக இருக்கின்றது.

பல சந்தர்ப்பங்களில், மக்கள் உணவு உண்ட உடனேயோ அல்லது உணவோடு சேர்த்துத் தண்ணீரையோ குடிப்பார்கள். இருப்பினும், இந்த நடைமுறை அஜீரணத்தை ஏற்படுத்தும், மேலும் எடை அதிகரிக்கும். உணவு உண்பதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். இது அதிகப்படியான உணவைத் தடுக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சேமிக்கப்பட்ட கொழுப்பை உடைக்க சூடான நீர் உதவுகிறது. அதேநேரம் தேவையற்ற கொழுப்பை எரிக்க எளிதாகிறது. உடல் எடையை குறைக்க தினமும் வெந்நீரை உட்கொள்வது நல்லதாகும். கோடைக்காலத்தில் கூட, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தூங்குவதற்கு முன், சூடான நீரை உட்கொள்ளுவது நன்மை பயக்கும்.

சிலருக்குத் தண்ணீர் குடிக்க பிடிக்காது, ஏனெனில் அதில் சுவை இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க எலுமிச்சை, இஞ்சி, பெருஞ்சீரகம் மற்றும் பழத் துண்டுகள் போன்ற இயற்கை சுவைகளை சேர்த்துத் தண்ணீரை அருந்தலாம்.

எனவே, உடல் எடை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் தண்ணீரை அதிகமாக உள் எடுத்துக் கொண்டு அரோக்கிய வாழ்வை வாழுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கோடைகால முடி பராமரிப்பு குறிப்புகள்!

ஆடு வளர்ப்புக்கு 90% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

English Summary: Want to lose weight? Then drink enough water!
Published on: 13 May 2022, 02:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now