1. வாழ்வும் நலமும்

கோடைகால முடி பராமரிப்பு குறிப்புகள்!

Poonguzhali R
Poonguzhali R
Summer Hair Care Tips!

கோடையில் சூரிய ஒளியில் இருந்து சுட்டெரிக்கும் வெப்பம் மட்டுமல்லாமல், தூசி, மாசுபாட்டின் காரணமாகத் தோல் மற்றும் கூந்தலுக்கு வறட்சி ஏற்படுகிறது. அதேசமயம் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை நமது தோல் மற்றும் உச்சந்தலையில் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான சுத்திகரிப்பு, காற்றில் உலர்தல் ஆகியவை முடி ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடியாக மாறுதல் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் முடியைச் சுத்தம் செய்து நீரேற்றம் செய்ய முடி சலூனுக்குச் செல்வது சாத்தியமில்லை என்பதால், கையால் செய்யப்பட்ட, ஆர்கானிக் மற்றும் ரசாயனம் இல்லாத ஹேர் மாஸ்க்குகளை வீட்டிலேயே நன்றாகப் தயாரிக்கலாம் என்று முடி பராமரிப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். HT லைஃப்ஸ்டைலுக்கு அளித்த நேர்காணலில், அழகுசாதன நிபுணர் மற்றும் இனத்தூரின் நிறுவனர் பூஜா நாக்தேவ், ஈரப்பதம், நச்சுத்தன்மை மற்றும் முடியை புதுப்பிக்கும் பண்புகளைக் கொண்ட சில ஸ்டேபிள்களை வெளிப்படுத்தினார், குறிப்பாக எளிதாக செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்களைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.

முட்டையின் வெள்ளை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க்

ஒரு முட்டையில் அதிக புரதம் உள்ளது. இதில் சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவும் சத்தான பொருட்கள் உள்ளன. ஒன்று அல்லது இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து) ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். ஷவர் கேப் அல்லது காட்டன் துணியால் தலையை மூடிய பிறகு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இயல்பாக முடியை மைல்டான ஷாம்பூ கொண்டு அலசி விடலாம்.

வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

கோடை வெப்பம் உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, வலி ​​மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். இந்த சிக்கலில் இருந்து விடுபட உதவும் ஒரு சிறந்த தீர்வு தேவைப்படும் வேளையில் தேன் மற்றும் வாழைப்பழம் தக்க உறுதுணையாக இருக்கும். தேன் மற்றும் வாழைப்பழம் போன்ற பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் கொண்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
தேன் உச்சந்தலையில் ஈரப்பதத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது வேர்களைப் பலப்படுத்துகிறது. ஒரு பிளெண்டரில், ஒரு வாழைப்பழம் மற்றும் 2-3 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த பேஸ்ட்டைத் தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். குளிர்ந்த நீரில் அதை அலசவும். இந்த இயற்கையான ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். அதே வேளையில் உங்கள் உச்சந்தலையில் சூட்டைக் குறைக்கும்.

அவகேடோ + பாதாம் எண்ணெய் ஹேர் மாஸ்க்

அவகேடோ என்பது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உயர் ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட ஒரு சூப்பர்ஃபுரூட் ஆகும். இது தலைமுடிக்குக் கூடுதல் மென்மையையும் பளபளப்பையும் வழங்க இந்த ருசியான பழத்தைப் பயன்படுத்தலாம். அவகேடோவை தோல் நீக்கிய பின் மசித்துக் கொள்ளவும். மசித்த அவக்கேடோ-வை ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலைமுடியின் நீளத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து ஒரு மைல்டான ஷாம்பூ-வைக் கொண்டு தலை முடியைக் கழுவவும்.

DIY ஹேர் மாஸ்க் செய்முறை

- ஒரு கிண்ணத்தில், ஒரு டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் ஒரு குறிப்பிட்ட அளவு அலோ வேரா ஜெல் சேர்க்கவும்.

- கூடுதல் முடி நன்மைகளுக்கு 4-5 துளிகள் வைட்டமின்-ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும்.

- இது ஒரு கிரீமி டெக்ஸ்சர்டு பேஸ்டாக மாறும் வரை நன்கு கலக்கவும்.

- இதை உங்கள் உச்சந்தலையில் தடவி 5 நிமிடங்களுக்கு வேர்களை மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து ஷாம்பூவுடன் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்

• முடி உதிர்வதைத் தடுக்கிறது

• முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது

• பொடுகை குறைக்க உதவுகிறது

• தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

இனி வீட்டிலேயே ஹேர்மாஸ்-கை இயற்கையான பொருள் கொண்டு தயாரித்து தலைமுடியைக் குளிர்ச்சியாக வைத்துப் பராமரியுங்கள்.

மேலும் படிக்க

கோடையில் கண்களைப் பராமரிப்பது எப்படி?

இனிப்புகளை உணவுக்கு முன்தான் சாப்பிட வேண்டும்? ஏன் தெரியுமா?

English Summary: Summer Hair Care Tips! Published on: 11 May 2022, 03:28 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.