இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 April, 2023 3:18 PM IST
what are the health benefits of Walking 10,000 Steps Every Day

ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள் (10,000 steps) நடப்பது, உடல்நலனை எந்தளவிற்கு மேம்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதைப்போல் உங்களது ஸ்மார்ட்வாட்ச்சில் ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள் நடப்பதை இலக்காக காட்டுவதை பார்த்திருப்பீர்கள். அது ஏன் 10,000 அடி என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? தெரியலனாலும் பிரச்சினையில்லை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

வேலையின் காரணமாக நமது வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் மிகவும் உட்கார்ந்த நிலையில் இருப்பதால், ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு நடைப்பயிற்சி அவசியமாகிவிட்டது. நடைபயிற்சி என்பது அனைத்துத்தரப்பட்ட மக்களும் அணுகக்கூடிய எளிமையான உடற்பயிற்சி ஆகும். வழக்கமான நடைப்பயிற்சி இதயத் திறனை அதிகரிக்கிறது, தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்கிறது.

கூடுதலாக, நடக்க நீங்கள் ஒரு சிறப்பு இடத்தைப் பார்க்க வேண்டியதில்லை. வாழ்வின் அன்றாட பணிகளில் உங்களது நடைப்பயிற்சியை இணைத்துக் கொள்ளலாம்.  உதாரணமாக, லிப்ட் அல்லது எஸ்கலேட்டர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, உங்கள் இலக்கை அடைய படிக்கட்டுகளில் நடந்து செல்லுங்கள்.

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது சிறந்த பயிற்சியாக கருத முடியுமா?

உடல் எடையை குறைக்க விரும்புபவர் நடக்க வேண்டிய எண்ணிக்கையும், உடல் எடையை பராமரிக்கவும், உடற்பயிற்சியை தனது வாழ்க்கைமுறையில் இணைக்கவும் விரும்பும் நபர் நடக்க வேண்டிய படிகளின் எண்ணிக்கையும் வேறுபடலாம்.

எனவே, ஒவ்வொரு நாளும் 10,000 படிகள் நடப்பது அனைத்து உடல் வகைகளுக்கும் சமமாக பயனுள்ளதாக இருக்காது. அதே நேரத்தில் ஒரு நபர் ஒரு நாளில் எவ்வளவு கலோரியை எரிக்கிறார் என்பதை கண்டறிய இது ஒரு நல்ல குறிகாட்டியாகும்.  10,000 அடிகள் என்னும் குறிக்கோள் முதலில் உடற்பயிற்சி செய்ய ஊக்கமளிக்கும் ஒரு வழியாகும்.

10,000 அடிகள் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது:

ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 படிகள் நடப்பது இரத்த அழுத்தத்தை மேம்படுத்தி இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துவதால் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சுறுசுறுப்பாக செயல்படுவதன் மூலம், நம் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற பயன்படுத்துகிறோம். அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறோம். ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது நமது நரம்புகளில் உள்ள கொலஸ்ட்ராலை ஆற்றலுக்காக எரிக்க உதவுகிறது.

மனநிலைக் கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது:

 மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகளானது குறைவான உடற்பயிற்சி, மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையை வழிநடத்துதல் ஆகியவற்றால் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, பூங்காவிற்கு நடைபயிற்சி செல்வது, அது அரை மணி நேரம் மட்டுமே இருந்தாலும், ஒரு நபர் இயற்கையுடன் தொடர்பு கொள்ளவும், புதிய நபர்களை சந்திக்கவும், அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த மனநிலையை மேம்படுத்துகிறது.

தூக்கத்தை மேம்படுத்துகிறது:

சரியான இரவு தூக்கத்திற்கு உடற்பயிற்சி அவசியம். ஏனென்றால், உடற்பயிற்சி செய்வது நம் உடலில் உள்ள அதிகப்படியான சக்தியை வெளியேற்றி நம்மை சோர்வடையச் செய்கிறது.

எடை குறைப்பை ஊக்குவிக்கிறது:

வேகமான அல்லது மிதமான வேகத்தில் நடப்பது உடல் எடையை குறைக்க கலோரிகளை எரிக்க உதவுகிறது.

pic courtesy- krishiJagran edit work

மேலும் காண்க:

இந்தியாவில் மே மாதத்தில் உரத்தின் விலை எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு

English Summary: what are the health benefits of Walking 10,000 Steps Every Day
Published on: 26 April 2023, 03:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now