வெளியேச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வதால், சிலருக்கு முகத்தில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.
வெளியே செல்வதைத் தவிர்க்கவும் (Avoid going out)
கொரோனாத் தொற்றுக் காலத்தில் வெளியே செல்வதே சவாலான ஒன்று. அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே செல்லுமாறும், முகக்கவசம் அணியாமல் செல்லவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம்- அபராதம் (Mask- Penalty)
அதுமட்டுமல்ல கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
வாழ்வின் அங்கம் (Avoid going out)
இதன் காரணமாக, முகக்கவசம் என்பது தற்போதைய வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இந்தக் சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும்.
ஒவ்வாமை (Allergy)
சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது. முகத்தில் பல்வேறு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறு முகக்கவசத்தால் ஏற்பட்ட ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.
ஒவ்வாமையின் அறிகுறிகள் (Symptoms of allergies)
-
சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
-
வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும்.
-
முகக்கவசம் அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும்.
-
முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.
கடைப்பிடிக்க வேண்டியவை (Things to follow)
சுத்தம் (Cleaning)
வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாகச் சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம்.
கிரீம் (Cream)
வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.
வறட்சிப் போக்கும் (Drought)
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும்.
எலாஸ்டிக் கூடாது (Should not be elastic)
எலாஸ்டிக் பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும்.முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதிக தளர்வும் வேண்டாம் (Do not over-relax)
அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏதுவாக முகக்கவசம் சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். எனினும் அதிக தளர்வும் கூடாது.
ரத்த ஓட்டத்தை பாதிக்கப்படும் (Affects blood flow)
எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம் சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.
மேக்-அப் கூடாது (Make-up should not be)
பெண்கள் வெளியே செல்லும்போது ஒப்பனை செய்து கொள்வதற்கு மறக்கமாட்டார்கள். முகக்கவசம் அணியும்போது அதனை தவிர்ப்பதுதான் நல்லது.
நோய்த் தொற்றுகள் (நோய்த் தொற்றுகள்)
ஏற்கனவே முகத்தை மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.
சன்ஸ்கிரீன் (Sunscreen)
-
புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும்.
-
ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
-
இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால், முகக்கவசத்தினால் முகத்தில் ஏற்படும் ஒவ்வாமையில் இருந்து தப்ப முடியும்.
மேலும் படிக்க...
உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!