கேமரூனில் நேச்சர்கோல்ட் (Naturcold) என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் இருமல் மற்றும் சளி மருந்தில் (syrup) மிக அதிக அளவு நச்சுத்தன்மை உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு இவை எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய இந்தியாவின் உதவியை WHO நாடியுள்ளது.
சிரப்பில் உள்ள பேக்கேஜிங் லேபிளில், இது ஃப்ராகன் இன்டர்நேஷனல் (இங்கிலாந்து) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என உள்ளது. ஆனால் இங்கிலாந்தின் சுகாதார கட்டுப்பாட்டாளர் அத்தகைய பெயரில் எந்த நிறுவனமும் தங்களது நாட்டில் இல்லை எனத் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக நேச்சர்கோல்டு மருந்தினால் ஆறு குழந்தைகளின் மரணம் அடைந்த நிலையில், அதகுறித்து விசாரித்து வருவதாக ஏப்ரலில் கேமரூனின் சுகாதார கட்டுப்பாட்டாளர் கூறியதைத் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. WHO அங்குள்ள அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர்.
WHO-இன் கூற்றுப்படி, சிரப்பில் 28.6% டைத்திலீன் கிளைகோல் அடங்கியுள்ளன. இந்த அளவு பாதிப்பினை உண்டாக்கக் கூடியவை. சிரப்பில் பயன்படுத்தப்படும் ப்ரோபிலீன் கிளைகோல் என்ற மூலப்பொருளை, எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் போன்ற மலிவான மேலும் நச்சுத்தன்மையுள்ள மாற்றுகளுடன் மாற்றுகிறார்கள்.
இந்த நச்சுத்தன்மை வாய்ந்த மூலக்கூறினால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மாற்றப்பட்ட மன நிலை மற்றும் கடுமையான சிறுநீரக காயம் போன்ற பிற அறிகுறிகளுடன், இறுதியில் மரணத்திற்கு கூட வாய்ப்புள்ளது. 2022 ஆம் ஆண்டில், காம்பியா, இந்தோனேசியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள், முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் - கடுமையான சிறுநீரகக் காயத்தால் இறந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் Naturcold போன்ற ஒரு மருந்து தான் (அதன் தயாரிப்பு வேற நிறுவனம்)
அனைத்து சிரப்களும் வெவ்வேறு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் கடந்த மூன்று நான்கு சம்பவங்களில், அவை இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள். இந்தோனேசியாவில் ஏற்பட்ட மரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிரப்களுடன் தொடர்புடையவை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதனால் அங்கு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரூனில் நடந்த சம்பவத்தைப் பற்றி மேலும் அறிய இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது அதிக முன்னுரிமை என்று WHO கூறியுள்ளது. பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்த இருமல் சிரப் சம்பவங்களில் தொடர்புடைய நிறுவனங்களை கண்டறியும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளை கண்டறிவதில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இருமல் சிரப்பில் நச்சுத்தன்மை உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் காண்க: