1. செய்திகள்

அரிசி ஏற்றுமதியில் கட்டுப்பாடு- அமெரிக்காவை திணறடித்த இந்தியர்கள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Ban on exports of non-basmati white rice has triggered panic buying

பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியினை மூட்டை மூட்டையாக வாங்க மார்கெட்களில் திரண்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையில் அரிசியானது தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஜூலை 20 அன்று தடை விதித்தது. இருப்பினும், புழுங்கல் அரிசிக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போதிய மழையின்மை போன்ற வானிலை மாறுபாடுகளால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியச் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  உள்நாட்டு சந்தையில் போதுமான அளவு அரிசி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள், அரிசியினை வாங்க முந்தியடித்துக் கொண்டு கடைகளுக்கு விரைந்தனர். மிக நீண்ட வரிசையில் காத்திருந்த கூட்டத்தால் கடை உரிமையாளர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

மேசனில் உள்ள இந்திய அரிசியின் முன்னணி விற்பனையாளர் ஒருவர் தெரிவிக்கையில், ஜூலை 21 அன்று பாஸ்மதி உட்பட அனைத்து வகையான அரிசிகளும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. கையிருப்பு இருக்கும் வரை விற்பனை செய்வதாகக் கூறினார். இருக்கின்ற அரிசிக்கூட ஒரு நாளுக்கு மேல் இருக்காது என்று அவர் கூறினார்.  இதற்கிடையில், அதிக ஆசிய மக்கள்தொகை கொண்ட டெக்சாஸ் போன்ற மாநிலங்களில், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெக்சாஸில், 20 பவுண்டுகள் கொண்ட வெள்ளை அரிசியை $34-க்கு வாங்கியதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை மாவு ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தியபோது இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, துறைமுகங்களில் காத்திருக்கும் அரிசி மூட்டைகளுக்கான ஏற்றுமதிகள் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அரிசியின் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் முக்கிய உலகளாவிய சப்ளையர்கள் ஆவார்கள். தற்போது தக்காளி விலை உயர்வு விஸ்வரூபம் எடுத்த நிலையில் அரிசியின் விலையும், தட்டுப்பாடும் பொதுமக்களின் தலையில் புதிய சுமையாக விழுந்துள்ளது.

இந்தத் தடை உலகளவில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். அரிசி உற்பத்தியில் முக்கிய நாடான சீனாவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டளவில் உலகளாவிய அரிசிக்கான தட்டுப்பாடு குறையும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் காண்க:

12 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத் தொகையினை உயர்த்தியது தமிழ்நாடு அரசு

20 மற்றும் 50 ரூபாய்க்கு இப்படி ஒரு சாப்பாடா? தென்னக ரயில்வே அசத்தல்

English Summary: Ban on exports of non-basmati white rice has triggered panic buying Published on: 22 July 2023, 05:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.