பெயரைச் சொன்னவுடனே மனக் கண்ணில் என்ன முளைக்கும்? அது எது? மழைக் காலத்தில் செடிகளுக்கு இடையே, கற்களுக்கு இடையே குடை போல முளைக்கும் காளான்கள்தான் அவை.
மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவரம்தான் காளான்.
ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் உணவாகப் பயன்பட்டு வந்தத காளான்கள் பலவகை ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே மறைத்து வைத்துள்ளன.
காளான் என்றால் என்ன? (What is Mushroom)
ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமானதாக் கருதப்படும் பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் தன் உணவை தயாரித்துக்கொள்ள முடியாது. இதன் காரணமாகவே அவை சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கின்றன.
பொதுவாக, தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப் பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றிக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துகள் நிறைந்திருக்கும். இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாகப் படர்ந்திருக்கும். சாதகமான சூழல் நிலவும் போது அதாவது, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின், பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும்.
காளான் தேவை அதிகம் (More Need)
தமிழகத்தில் காளான் வளர்ப்பு பெருமளவு பேசப்படாவிட்டாலும் அதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் தினசரி 75 முதல் 100 டன் அளவிலான காளான் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் காளானின் அளவு 10 முதல் 15 டன் மட்டுமே. எனவே, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற பகுதிகளிலிருந்து காளான் பெறப்படுகிறது.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
-
காளான் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆவதோடு மட்டுமலாமல், மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
-
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
-
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
-
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
-
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
-
காளான் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு பொருட்களை கரைக்கும் தன்மையுடையது.இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.
-
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
-
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
-
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்
-
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
-
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
தவிர்க்கவேண்டியவர்கள் (How Should Avoid)
-
பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது
-
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காளானை சாப்பிடக்கூடாது.
தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
எந்தெந்த பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!