Krishi Jagran Tamil
Menu Close Menu

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!

Tuesday, 03 November 2020 07:00 PM , by: KJ Staff

Credit : Dinakaran

எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் (sesame) மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து (Calcium) அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் மிகச் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. ஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர். எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியை தாங்கிக்கொள்ளும் சிறப்புத் தன்மை கொண்டது. பழங்காலத்திலும் சரி, இன்றும் கிராமப்புறங்களில் அநேக வீடுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் குளிர்ச்சியையும் இந்த எண்ணெய் தரும்.

இதயத்திற்கு நல்லது

எள் விதை எண்ணெய் இதயத்தின் (Heart) ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-Oxident) மற்றும் சீசேமோலின் (Sesamolin), அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

ரத்த சோகையைத் தடுக்கும்

இரும்புச் சத்தினால் ஏற்படும் ரத்த சோகை (Anemia) குறைபாட்டினை நீக்கும் தன்மை எள் விதையில் உள்ளது. வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்துக்களை உடலுக்கு அதிக அளவில் தருகின்றது.

ஆற்றல் தரும்

எள்ளில் புரதச் சத்து (Protein) அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

எள்ளின் பயன்கள்:

 • சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
 • எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
 • எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது
 • கொழுப்பின் அளவை குறைக்கிறது
 • ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தேவையற்ற சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!

எள் விதை எண்ணெய் Anti-Oxident இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் Uses of Sesame Oil
English Summary: Sesame gives energy to the heart!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. கோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்?
 2. சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!
 3. PAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்!
 4. இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!
 5. Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
 6. தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!
 7. கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்! - விவசாயிகள் கோரிக்கை!!
 8. PM Kisan: விரைவில் 8வது தவணை விடுவிப்பு - பயனாளிகளின் புதிய பட்டியல் வெளியீடு!! விவரம் உள்ளே!!
 9. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தாவரவியல் பூங்கா - பொதுமக்களுக்கு அனுமதி!!
 10. வேளாண்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம்! - பிதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.