அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் தற்போது அபாயக் கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா (Corona)
உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா, பல்வேறு வகைகளில் உருமாறி மக்கள் அச்சத்தின் பிடியில் தவிக்க வைத்துள்ளது. அந்த வகையில் ,இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, 98 நாடுகளில் பரவி உள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
அதிவேகமாகப் பரவுகிறது (Spreading rapidly)
பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.
அபாய கட்டம் (Risk phase)
இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாகப் பரவும் தன்மை உள்ளவை என்பதால், உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது எனலாம்.
டெல்டா வைரஸ் (Delta virus)
டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டியது அவசியம். தொடக்கத்திலேயே நோயைக் கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு (Tracking)
கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம்.
தடுப்பூசி (Vaccine)
அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் கணிப்பில், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு இருக்காது (There will be no harm)
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சம் (Peak)
3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!
உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்
தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!