Health & Lifestyle

Saturday, 09 April 2022 05:36 PM , by: Poonguzhali R

You can do facials at home...!

பொதுவாக பெண்களுக்கு எப்போதுமே தங்களுடைய சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிறையவே இருக்கின்றது.  அதற்காக பார்லர் சென்று அதிக பணத்தைச் செலவு செய்து வருகின்றனர்.

இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தினை பளிச்சென வைத்துக் கொள்ளும் பேஷியல் பேக்கை செய்து விட முடியும்.  இது தோலுக்கு எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.  பார்லரில் பயன்படுத்தப்படும் கிரீம்கள் நாளடைவில் நம் சருமத்தின் செல்களை செயலிழக்கச் செய்து விடுகின்றன.  அதனால் சிறு வயதிலேயே சருமத்தின் தோல் சுருங்க ஆரம்பிக்கும்.  ஆங்காங்கு கரும்புள்ளிகள் வர ஆரம்பிக்கும்.  தோலில் அலற்சி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.  ஆனால் இவை போன்ற பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் நாம் வீட்டிலேயே பேஷ் பேக்கைச் செய்து பயன்படுத்திப் பார்லர் லுக்கைப் பெற முடியும்.

பார்லரில் உள்ளது போன்றே க்ளன்சிங், ஸ்கிரப், மாய்ஸ்ட்ரைஸர், மசாஜ், பேஷ் பேக் என அனைத்தையும் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே நாம் செய்து பயன்படுத்த முடியும். 

தேவையான பொருட்கள்:

      காய்ச்சாத பால் – 6 ஸ்பூன், எலும்பிச்சை சாறு – 2 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன்,  நன்கு சூடான் தண்ணீர், கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சிறிதளவு, கடலை மாவு 3 ஸ்பூன், மஞ்சள் பொடி 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன், தேவையான அளவு காட்டன்.

கிளன்சிங்

      காய்ச்சாத பாலை எடுத்துக் காட்டனை அந்த பாலில் நனைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.  ஒரு 5 நிமிடம் செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.  அதன் பின் ஈரமான டவல் வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.  பால் நல்ல க்ளன்சராகச் செயல்பட்டுமுகத்தில் உள்ள அழுக்குகளையெல்லாம் வெளியேற்ற உதவும்.

ஸ்கிரப்

     எலும்பிச்சைச் சாறுடன் தேன் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்குக் கலக்கி கொள்ள வேண்டும்.  அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.  ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் 10 நிமிடம் அப்படியே விட்டுக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.  இது முகத்தில் உள்ள கரும் புள்ளியைச் சரி செய்யும்.

ஸ்டிமிங்

தண்ணீரை கொதிக்க விட்டு ஒரு ஐந்து நிமிடம் லேசாக நீராவி பிடிக்க வேண்டும்.

மசாஜ் க்ரீம்

     கற்றாலை ஜெல், எலும்பிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் க்ரீம் போல அப்ளை செய்ய வேண்டும்.  அதன் பின் 15-20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.  இது முகத்தை மிக மென்மையாகவும், பொலிவானதாகவும் மாற்றும்.

பேஷ் பேக்

     கடலை மாவு, மஞ்சள் தூள், பால், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.  இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து சிறிது மசாஜ் செய்ய வேண்டும்.  ஒரு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். 

இதனை மாதம் ஒரு முறை செய்தாலே முகம் பொலிவுடன் இருக்கும்.

 

மேலும் படிக்க...

இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ் !!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)