1. வாழ்வும் நலமும்

வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ் !!

Poonguzhali R
Poonguzhali R
Some tips to protect your skin in the summer!!

கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  இந்த வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள்,  முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும்.  இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

பால், தயிர், தேன் பொருட்கள்:

  • இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும்வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

  • அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெறும்.

  • ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப் போல பளப்பளப்பாக இருக்கும்.

பயன்கள்

  • இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும்.

  • மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது.

  • முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

  • கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  • தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப் படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன. 

முகப் பொலிவூட்டும் பழங்கள்

  • முகத்தில் உள்ல கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம்.

  • எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும்.

  • தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.  இதற்கு சில உணவுகளையும், நீர்பான்ங்களையும் உள் பருக வேண்டும்.  அதற்கு வெள்ளர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது.  இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும். 

                கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.  அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.  நீர்ச் சத்து குறைபாடு இன்றி உடலைப் பாதுகாக்க வேண்டும். 

 

மேலும் படிக்க...

கொளுத்தும் கோடை- தப்பிக்க என்ன வழி!

வெயில் நேரம் கவனம் கொள்ளுங்கள்: கோடை காலத்தில் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

English Summary: Some tips to protect your skin in the summer!! Published on: 09 April 2022, 01:08 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.