Horticulture

Friday, 21 August 2020 09:56 AM , by: Elavarse Sivakumar

Credit: Overblog

திரவ உயிர் உரங்கள் பயிருக்கு உயிரூட்டும் உன்னதத்தன்மைப் படைத்தவை. எனவே விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களில் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க முன் வர வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், செயல்படும் திரவ உயிர் உரம் உற்பத்தி மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நெற்பயிருக்கான அசோஸ்பைரில்லம், சிறுதானியங்கள், சூரியகாந்தி, எள், பருத்தி, கரும்பு, காய்கனிப் பயிர்கள், தென்னை, வாழை போன்ற நெல் அல்லாத இதர பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), அனைத்துப் பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் திரவ நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

இந்த உயிர் உரங்கள் பயிருக்கு பல்வேறு வகைகளில் நன்மை பயக்கின்றன.

பயன்கள்

  • உயிர் உரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றிப்பயிர்களுக்கு அளிக்கின்றன.

  • மண்ணில், பயிர் எடுத்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள மணிச்சத்தைப், பயிருக்கு எளிதில் கிடைக்கச் செய்வதில் உயிர் உரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

  • பயிர் வளர்ச்சி ஊக்கியான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் B அகியவற்றை உயிர் உரங்களிள்,  நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளரும்.

  • உரங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் உரச் செலவு குறைகிறது. மண் வளம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.

இந்த திரவ உயிர் உரங்கள், அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கும்.
எனவே இதனை மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.

மேலும் படிக்க...

அரசின் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!

நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப் புழு தாக்கும் அபாயம்- விவசாயிகளே எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)