கடலூர் மாவட்டம், கிள்ளை கடைமடை பகுதியில் நெல் மற்றும் மணிலா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிர்கள் (Affected crops)
கடலூர் மாவட்டம், கிள்ளை கடைமடை பகுதிகளான குச்சிபாளையம், சிங்காரகுப்பம், சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் ஏற்கெனவே காலம் கடந்து சாகுபடி செய்ததால் மழை வெள்ளத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
நெல் சாகுபடி (Paddy cultivation)
தற்போது குச்சிப்பாளையம், சிங்காரகுப்பம் ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி செய்து கதிர் வரும் நிலையில் உள்ளது.மேலும் இந்தப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பலத்த மழையால் மணிலா பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் தற்போது மீண்டும் மணிலா சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது கடைமடைப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் வரும், மணிலா பயிர்கள் நீரின்றி கருகும் நிலையில் உள்ளன எனவே வீராணம் ஏரியிலிருந்து கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை மனு (Request Petition)
இதுதொடர்பாக பரங்கிப்பேட்டை எஸ்.ரமேஷ்பாபு தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர், சிதம்பரம் உதவி ஆட்சியர், கொள்ளிடம் வடிகால் நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளனர்.
மேலும் படிக்க...
தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை
அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!