1. செய்திகள்

அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!

KJ Staff
KJ Staff
Paddy Straw
Credit : India Mart

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைக்கு அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியில், நெல் அறுவடை (Paddy Harvest) தொடங்கி நடந்து வரும் நிலையில், வைக்கோல் விற்பனை (Paddy straw sales) தீவிரமடைந்துள்ளது. அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலானது கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகப் (Fodder) பயன்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள், வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், கால்நடைகளின் (Livestock) தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது வைக்கோல் தான்.

கால்நடைத் தீவனம்:

உடுமலை, மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது. புயல் மற்றும் பருவம் தவறிய மழையால் மகசூல் குறைந்துள்ளது. அறுவடைப் பணிகளை இயந்திரங்கள் மூலம் தொடங்கினாள் விவசாயிகள். அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல் (Paddy straw) கால்நடைகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுகிறது. ஆண்டு முழுவதும் இருப்பு வைத்துப் பயன்படுத்தும் தீவனமாக உள்ளதால், இதற்கு எப்போதும் தேவை (Need) உள்ளது. நடப்பாண்டு அறுவடைக்கு பின்பு, வைக்கோல்கள் கட்டுகளாக விற்பனையாகிறது.

ஒரு கட்டு வைக்கோல் ரூ.225

தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், பெரும்பாலான இடங்களில், இயந்திரங்கள் (Machines) வாயிலாகத் தான் அறுவடை நடக்கிறது. இதனால், வைக்கோல் கட்டு உருவாக்குவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வயலில் பரவிக்கிடக்கும் வைக்கோல் மீது, இயந்திரங்களை இயக்கும்போது அவற்றை ஒன்று சேர்த்து உருளை வடிவ கட்டுகளாக்குகின்றன.
ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வைக்கோல், 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கட்டு உத்தேசமாக, ரூ.225க்கு கொடுக்கிறோம். ஒரு ஏக்கர் பரப்பில், 20 முதல் 25 கட்டு கிடைக்கிறது. பல மாவட்டங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போரும் வைக்கோல் (Paddy straw) கட்டுகளை வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!

தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை

English Summary: Paddy straw sales start as harvest continues! Rs. 5,000 available per acre! Published on: 05 March 2021, 06:46 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.