கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது.
கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க மையத்தில், சோளம் 'கே12' (K 12) சான்று நிலை விதையும், தட்டை பயறு 'சிஓசிபி7' (COCB) என்ற விதையும் முளைப்பு திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் முயற்சியில், இரண்டு தட்டுகளில் தனித்தனியாக, 50 விதைகளை போட்டு கடந்த மாதம், 28ம் தேதி விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்த நாளில் இருந்து, எட்டு முதல் 12 நாட்களில் விதையின் முளைப்பு திறன் சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவேட்டில் பதிவு செய்து, விதைகளை வாங்க வரும் விவசாயிகளுக்கு முளைப்பு திறன் சதவீதம் குறித்து விபரம் தெரிவித்து, விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விரு விதைகளும், 75 சதவீதம் முளைப்பு திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் சோளம், 4,250 கிலோவும், தட்டை பயறு 400 கிலோவும் இருப்பு உள்ளது. எனவே இதனை விவசாயிகள் வாங்கி, விதைப்பு செய்து பயன்பெறலாம்.
தகவல்
அனந்தகுமார்
வேளாண் உதவி இயக்குனர்
மேலும் படிக்க...
இயற்கை கழிவுகளை உரமாக்கும் நுண்ணுயிர் கூட்டுக் கலவை- TNAUவின் தயாரிப்பு!
பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?