தென்னந்தோப்பில் கோகோ, மிளகு ஆகியவற்றை ஊடுபயிராக, சாகுபடி செய்து விவசாயிகள், ஒரே சமயத்தில் இரண்டு வருமானம் ஈட்டலாம்.
கோகோவின் தேவை (The need for cocoa)
சாக்லேட், கேக் மற்றும் ஊட்டசத்து மிக்க சத்துப்பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய கோகோ மூலப் பொருளாக பயன்படுகிறது. இதன் காரணமாக, கோகோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
பயிரிடுதல் (Cultivation)
-
இரண்டுத் தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோகோ செடியை நடுவது அல்லது இரண்டு தென்னை வரிசையில் ஒரு வரிசை நடுவது உகந்தது.
-
ஒரு ஏக்கருக்கு 200-225 செடி கள் தேவை.
-
நடும் போது நாற்றின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணின் மேற்பரப்பும்.
-
பூமியின் மேற்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
மிதிபடக்கூடாது (Do not step on it)
எக்காரணம் கொண்டும் கால்களால் நாற்றினை மிதித்து விடக் கூடாது.
கவாத்து செய்தல் (Marching)
நாற்று நட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பருவமழைக் காலங்களில் கவாத்து செய்ய வேண்டும் மிக மிக அவசியம்.
அறுவடை (Harvest)
-
முக்கிய தண்டான சுப்பானில் இருந்தும், விசிறிக் கிளைகளில் இருந்தும் பூக்கள் மலர்ந்து மஞ்சள் நிறமான பழங்கள் உண்டாகும்.
-
கூர்மையானக் கத்தியின் உதவியுடன் மட்டுமே கோகோப் பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
பதப்படுத்தும் முறை (Processing method)
-
அறுவடை செய்தப் பழங்களை 4 முதல் 5 நாட்கள், நிழலான இடங்களில் குவியலாக வைக்க வேண்டும்.
-
பின்னர் பழங்களை உடைத்து உள்ளிருக்கும் விதைகளைத் தனியாகப் பிரித்து எடுத்து மூங்கில் கூடையில் சேகரிக்க வேண்டும்.
-
3-4 நாட்கள் கூடையில் உள்ள விதைகளை கலக்கி விடவேண்டும்.
-
அவ்வாறு செய்வதால் ஓரே சீராக விதைகள் பதப்படுத்தப்படுகிறது.
-
அதன் பின்னர் 3-4நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்தி காபிநிறத்தில், விதையின் உட் பகுதி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நன்மைகள் (Benefits)
-
இரண்டு வருமானம் ஒரே நிலத்தில் கிடைக்கும்.
-
மண் வளம் பெருகும்.
-
களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
-
கோகோ பழத்தின் ஓடு உரமாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன் படுகிறது.
-
தென்னையின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
-
தற்போது அரசு தோட்டக்கலை துறை மூலம் 40சதவித மானியத்தில் கோகோ நடவு செடிகள் வழங்கப்படுகிறது.
-
பிற தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி மூலம் செடிகள் வழங்கப்படுகிறது.
எனவே கூடுதல் வருமானமும்,நில வளமும் பெற அனைவரும் ஊடுபயிர் சாகுபடியைத் தவறாமல் செய்து பலனடைவோம்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
ஜூலை 1 முதல் மாற உள்ள முக்கியமான விதிகள்!!! நேரடியான பாதிப்புக்கள்!!