மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 June, 2021 8:07 AM IST

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலோர் தங்களின் வீடுகளில் சிறிய அளவிலான அழகழகான தாவரங்களை வளர்ப்பதை அதிகம் விரும்புகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்கள் அறைகளில் இருக்கும் நச்சுக் காற்றை சுத்திகரித்து நல்ல தூய்மையான காற்றை நமக்கு வழங்குகிறது. இருப்பினும், தாவரங்கள் வளரும் போது சிறிய அளவிலான பூச்சிகளும் சேர்ந்தே வளர்கிறது. இந்த பூச்சிகளை அழிக்க, பெரிய அளவிலான ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை, எளிதில் தயாரிக்கக்கூடிய சில இயற்கை பூச்சிகொல்லிகளை நாம் வீட்டிலேயே செய்யலாம்.

இவ்வாறு செய்யப்படும் வீட்டு பூச்சிக்கொல்லிகள் , தாவரங்களில் இருக்கும் பூச்சிகளை கொல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இவை நமது தாவரங்களின் வளர்ச்சியையும் பராமரிக்கும்.

1. வேப்ப எண்ணெய் - Neem Oil

வேப்ப எண்ணெய் முற்றிலும் இயற்கையானது மற்றும் கரிமமானது. இந்த பாரம்பரிய பூச்சிக்கொல்லி வீட்டு தாவரங்களில் பொதுவான பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், கொல்லவும் மிக பயனுள்ளதாக இருக்கும். இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது

தயாரிக்கும் முறை 

ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். தாவரங்களில் தெளிக்கவும். இலைகளில் தெளிக்க வேண்டாம். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு 15 நாட்களிலும் தெளிக்கலாம்.

2. பூண்டு & சூடான மிளகு - Garlic and Hot Pepper

உங்கள் தாவரங்களிலிருந்து செடிப்பேன் (Aphid) நீக்க இந்த ஸ்ப்ரே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு மற்றும் சூடான மிளகு தெளிப்பு உங்கள் தாவரங்களை செடிப்பேன் சாப்பிடுவதை தடுக்கிறது.

தயாரிக்கும் முறை

5-6 மிளகாய் மற்றும் 2-3 பூண்டு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். பசை அல்லது பொடியாக (Paste or powder) அவற்றை அரைக்கவும். ஒரு தெளிப்பு பாட்டிலில் (Spray bottle) வடிகட்டி உதவியுடன் (Strainer) கலவையை வடிகட்டவும்.பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளிக்கவும்.

3. நீலகிரி எண்ணெய் - Eucalyptus oil

இது குளவிகள், தேனீக்கள், ஈக்கள் போன்றவற்றுக்கான அற்புதமான இயற்கை பூச்சிக்கொல்லி.

தயாரிக்கும் முறை

500 மில்லி தண்ணீரில் ¼ (கால்) டீஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்க்கவும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலவையை ஊற்றி நன்றாக கலக்கும் படி செய்யவும் . பாதிக்கப்பட்ட தாவரங்களில் ஒவ்வொரு 10-14 நாட்களுக்கும் தெளிக்கவும்.

4. மிளகு தெளிப்பு - Pepper Spray

மிளகுத்தூள் கேப்சைசின் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது, இது பூச்சிகளுக்கு ஆகாது.

தயாரிப்பு முறை 

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், 2 தேக்கரண்டி மிளகு மற்றும் 2 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளிக்கவும். பிரச்சினை தீரும் வரை ஒவ்வொரு 10-15 நாட்களுக்கும் தெளிக்கவும்.

5. ஆல்கஹால் - Alchol

பூச்சிகளை விரட்ட ஆல்கஹால் கரைசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தயாரிக்கும் முறை :

1-2 கப் 70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் (isopropyl alcohol) மற்றும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு கரைசலை உருவாக்கவும். பாதிக்கப்பட்ட தாவரங்களில் கரைசலை தெளிக்கவும். ஒவ்வொரு 7-14 நாட்களுக்கு தெளித்து வந்தால் பூச்சிகள் காணாமல் போகும்.

மேலும் படிக்க....

விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட சில டிப்ஸ்!

ஈக்களின் தாக்குதலில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

English Summary: How to prepare Natural Pesticides For House plants
Published on: 22 June 2021, 08:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now