1. தோட்டக்கலை

ஈக்களின் தாக்குதலில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to protect fruits and vegetables from the attack of flies?

Credit : Boldsky Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில், இயற்கைக் காய்கறிகள் மற்றும் பழங்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், இவற்றை, ஈக்கள் மற்றும் புழுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்பது அதிக சவால் நிறைந்தது.

15 % பாதிப்பு (15% damage)

இன்றைய காலகட்டத்தில் பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் பழ ஈ தாக்குதலில் 15சதவீகிதம் பாதிக்கப்படுகின்றன.

பழ ஈ தாக்குதல் (Fruit fly attack)

மா,கொய்யா,பப்பாளி மட்டுமல்லாமல், பூசணி வகை குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிப் பயிர்களையும் தாக்குகிறது.

இழப்பு (Loss)

இதனால் விற்பனையின் தரம் பாதிக்கப்படுவதுடன் வருமானம் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே எளிய முறையில் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈ (Fruit fly)

பழ ஈ உருவத்தில் சிறியதாகவும், அதிக முட்டைகள் இடும் திறன் கொண்டதாகவும் இருப்பதால், கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்.

பழ ஈ யைக் கண்டறிதல் (Detection of fruit fly)

ஈக்கள் மிகச் சிறியதாகவும் ஆரஞ்சு அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன், கண்ணாடியை ஒத்த இறக்கைகளைக் கொண்டுடிருக்கும்.

பெண் ஈக்கள் (Female flies)

  • பெண் ஈக்கள் பொதுவாக, காய் மற்றும் பழங்களின் தோலுக்கு அடியில் துளையிட்டு முட்டை இடும். பின்னர் ஓரிரு நாட்களில் இளம் புழுக்கள் வெளியே வரும்.

  • அவ்வாறு வெளியே வரும் இளம் புழுக்கள், வெண்மை நிறத்தில் கால்கள் இல்லாமல் வெளியே வரும்.

  • நன்கு வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கு அடியில் சென்று கூட்டுப் புழுவாக உருமாறும்.

சேத அறிகுறிகள் (Symptoms of damage)

இளம் புழுக்கள் காய்களைத் துளைத்து சதைப் பகுதியை உண்ணும்.
இந்த வகையில் புழுக்கள் துளைத்தப் பகுதியின் மேல் பரப்பில் பழுப்பு நிற நீர் கசிந்து, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சந்தை மதிப்பைக் கெடுக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • கோடை உழவு.

  • களைகள் அகற்றுதல்.

  • காய்கள் மற்றும் பழங்களின் மீது பாலிதீன் பைகளைக் கொண்டு மூடுதல்.

  • ஏக்கருக்கு 20 கருவாட்டு பொறி மற்றும் 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தல்

தகவல்

அக்ரி சு சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

வேளாண்துறையின் முழுமையான வழிகாட்டுதல் இருந்தால் காய்கறிகள் வீணாகாது!

English Summary: How to protect fruits and vegetables from the attack of flies?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.