1. விவசாய தகவல்கள்

விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Some tips for farmers to earn extra income!

Credit : FeedNavigators

விவசாயம் என்பது, பயிர் சாகுபடியைப் பிரதானமாகக் கொண்டது. இருந்தபோதிலும், கால்நடைகளை வளர்த்தல், அவற்றிற்குத் தேவையானத் தீவனங்களையும் சேர்த்துப் பயிரிடுதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தடுக்கும் இயற்கை மருந்துகளைத் தயாரித்தல் உள்ளிட்டவற்றையும் மறுபுறம் செய்து வருவது கூடுதல் வருமானம் ஈட்ட வழி வகுக்கும்.

சிறு, குறு விவசாயிகள் (Small, marginal farmers)

இந்தியாவைப் பொறுத்தவரைச் சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழ்நாட்டிலும் ஏற்றத்தாழ அதே நிலைதான். சராசரியாக இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு விவசாயிகளிடமும் சுமார் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது.

வருமானம் ஈட்டும் வழிகள் (Ways to earn income)

இந்த நிலத்தைக்கொண்டு பயிர் செய்வதுடன், கூடுதல் வருமானத்திற்கான வழிகளைப் பார்ப்போம்.

அரசின் திட்டங்கள் (Government programs)

விவசாயத்தைப் பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும். இந்த மாதிரியான இயந்திரச் செலவுகளைக் குறைக்க அரசின் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.

இயற்கை உரங்கள் (Natural fertilizers)

இயற்கை விவசாயமாகச் செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும். இதை ஒருக் குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள் செலவு இன்னும் குறையும் நமக்கு வருமானமும் பெருகும்.

தேனீ வளர்ப்பு( Honeybee rearing )

  • இயற்கை விவசாயத்தில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அதனால்தான் விளைநிலங்களில் தேவதை என தேனீக்கள் அழைக்கப்படுகின்றன.

  • தேனீப் பெட்டி வைத்து வளர்க்கும் போது நமக்கு இரண்டு லாபம் கிடைக்கிறது. ஒன்று நமக்கு மகசூல் அதிகம் கிடைக்கும் இரண்டாவது நல்லத் தேன் கிடைக்கும்.

  • இதை விற்பனையும் செய்யலாம். தேன் கெட்டுப் போகாத உணவு என்பதால் பல நாட்கள் கூட வைத்திருக்கலாம்.

தேனீப் பெட்டி (Honey box)

ஒரு ஏக்கருக்குக் குறைந்தது 3 தேனீப் பெட்டியை வாங்கி வைக்கலாம். உங்களிடம் நிறைய இடம் இருந்தால் தேனீ வளர்ப்பைத் துணைத் தொழிலாகச் செய்யலாம்.

பல பயிர் சாகுபடி (Cultivation of many crops)

இயற்கை விவசாயத்தில் லாபம் பெற பயிர் சுழற்சி முறையைக் கையாளுங்கள். இது உங்கள் மண் வளத்தைக் காப்பாற்றும். தொடர்ந்து ஒரே பயிரை பயிர் செய்தால் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகமாகலாம். அதேசமயம் வெவ்வேறு பயிர்களை பயிர் செய்யும் போது நமக்கு வருமானம் கிடைக்கும்.

மதிப்புக் கூட்டுதல் (Value addition)

இயற்கை விவசாயத்தில் நீங்கள் அதிகம் லாபம் எடுக்க மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது மிக முக்கியம். இந்தியாவில் இருந்து விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவில் சட்டங்கள் உண்டு. அதற்குப் பூச்சிக்கொல்லியைத்தான் பயன்படுத்த வேண்டும். அதையும் இவ்வளவுதான் பயன்படுத்தவேண்டும் என்றக் கட்டுப்பாடும் உண்டு.

உதாரணமாக ஒருவர் மரவள்ளியை பயிர் செய்து மதிப்புக்கூட்டி வைத்துள்ளார். அதையே நீங்கள் மரவள்ளி பயிர்ரில் இயற்கை விவசாயம் செய்து மதிப்பு கூட்டி வைத்துளீர்கள் என்றால் உங்களுடைய பொருள் சுலபமாக ஏற்றுமதி ஆகும். அதிக வருமானமும் கிடைக்கும் இதனால்தான் அரசாங்கத்தால் இயற்கை விவசாயம் செய்ய அதிகம் வலியுறுத்தப்படுகிறது.

திட்டமிட்டுப் பயிரிடுங்கள் (Plan and cultivate)

அடுத்து எந்த பயிருக்குத், தேவை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து அந்த பயிர்களை பயிர் செய்யலாம். உதாரணமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது வெங்காயம் , எப்பொழுது வேண்டுமானாலும் விலையேறும். எனவே திட்டமிட்டுப் பயிரிட வேண்டும்.

விவசாயமும் மாடுவளர்ப்பும் (Agriculture and Livestock)

ஒரு மாடு இல்லாமல் இயற்கை விவசாயம் முழுமை பெறாது. விவசாயத்தில் 40 % செலவை குறைக்கும். கடைசின் போது தொழு உரம் தேவைப்படும். நம்மிடம் ஒரு மாடு இருந்தால் அது தேவைப்படாது.

பூச்சி விரட்டியும தயாரிக்கலாம். பயிர் வளர்ச்சியூக்கியையும் தயாரித்து விற்கலாம்.நமக்குத் தேவையான பால் கிடைக்கும். வியாபாரம் நோக்கமில்லாமல் விவசாயத்திற்காக வாங்குவதால் ஒரு நாட்டு மாடு அல்லது கலப்பின மாட்டை வாங்கலாம் சிறிது மெனக்கிட்டால், இன்னொரு மாடும் வாங்கலாம். கன்றுகள் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும்

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?

மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்

கரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

English Summary: Some tips for farmers to earn extra income!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.