பெரம்பலூரில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கு, தற்காலிகமாக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பெரம்பலூரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை, தற்காலிக ஒப்பந்த அடிப் படையில் பணித்தேர்வு முகமை மூலம் (Placement Agency)மூலம் நிரப்ப திட்டமிப்பட்டுள்ளது.
பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர், பயிர் அறுவடை பரிசோதனைகளின் தேர்வுப்பணி, அறுவடைப்பணி மற்றும் அதை சார்ந்த பணிகளை மேறகொள்ள, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, கணினி இயக்கும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியில் துறையில் பணிபுரிந்து இப்பணியை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அலுவலர்களும் தேர்வு செய்ய பரிசிலிக்கப்படுவர்.
மேற்கண்ட பணியிடங்கள் அனைத்தும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.15,050 வீதம் பணித்தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.
எனவே இப்பணியினை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் (Placement Agency) பணியாளர்களைத் தேர்வு செய்து வழங்க, தங்களது முகமையின் அடிப்படை விபரங்களை அனுபவம் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை வழங்க சேவைக் கட்டணம் ஆகியவற்றை 24.12.2020 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களைத் தேர்வு செய்து வழங்க வேண்டும்.
தகவல்
ப.ஸ்ரீவெங்கட பிரியா
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!