தேனியில் கொடிக்காய்ப்புளி சீசன் துவங்கியிருப்பதால், கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது.
கொடுக்காய்ப்புளி சாகுபடி (Cultivation of lentils)
தேனி மாவட்டத்தின் போடி பகுதியில், பல ஏக்கர் பரப்பில், கொடிக்காய்ப்புளி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு தற்போது கொடிக்காய்ப்புளி சீசன் துவங்கியுள்ளது. கொடிக்காய்ப்புளி மரத்திலேயே காய்த்துத் தொங்குகின்றன.
உதிரா மரம் (Uthira tree)
அதேநேரத்தில் மழை, காற்று அதிகம் அடித்தாலும் கீழே விழாமல் பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும். இதனால் இதனை உதிரா மரம் என அழைப்பர்.
3 மாதங்கள் சீசன் (3 months season)
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கொடிக்காய்ப்புளிக்கு சீசனாகக் கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)
-
தோல் இளம் சிவப்பாகவும், உள்பகுதி வெள்ளையுடன் இளம் சிவப்பாகவும், உள்ளே விதை பகுதி கருப்பாகவும் இருக்கும்.
-
இதனை சாப்பிடுவதால் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
கொடுக்காய்ப்புளியின் நன்மைகள் (Benefits)
கொடுக்காய்ப்புளியில் வைட்டமின்கள் A,C, B1,B2, B16, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவற்றை உட்கொள்வதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல், பித்தப்பைக் கற்கள் அகற்றப்படுதல், செரிமானப் பிரச்னைகளுக்குத் தீர்வு, எலும்புகள் வலுவடைதல் உள்ளிட்ட பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
ரூ.200க்கு விற்பனை (Selling for Rs.200)
மொத்த வியாபாரிகளிடம் சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ.120க்கு கொள்முதல் செய்து சில்லறையில் ரூ.200க்கு விற்பனை செய்கின்றனர். துவர்ப்பு, இனிப்பு கலந்து இருக்கும். இதனை, பலரும் விரும்பி சாப்பிடுவதால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க...
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!
மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!