தக்காளியைத் தாக்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் இலைச்சுருட்ட நச்சுயிரி நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நச்சுயிரி நோய் (Toxic disease)
தக்காளியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோயானது முதன்மையானது ஆகும். மேலும் இந்த நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது. இவற்றை கட்டுப் படுத்துவதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது.
அறிகுறிகள் (Symptoms)
-
புதிதாக வளரும் தக்காளிச் செடியின் இலைகள் மஞ்சளாகிவிடும்.
-
பிறகு இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி படிப்படியாகக் குறைந்துவிடும்.
-
பச்சை இலைகள் அளவில் குறைந்து சுருங்கி நரம்புகள் மஞ்சளாக மாறிவிடும்.
-
இலைகள் மேல்நோக்கி சுருண்டு, கிண்ணம்போல் இருக்கும் பூக்கள் தோன்றும். ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்து விடும்.
பாதுகாக்க வழிகள் (Preventive measures)
-
வெள்ளை ஈக்களை கண்காணிக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைக்க வேண்டும்.
-
விளை நிலங்களைச்சுற்றி வரப்பு பயிர்களாக சோளம், கம்பு மக்காச்சோளம் போன்றவற்றை தக்காளி விதைப்பதற்கு முன் விதைக்கலாம்.
-
களைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
-
இமிடாகுளோரைடு அல்லது டைமெதோவேட்டை 0.05 சதவீதம் அதாவது ஒருலிட்டர் தண்ணிருக்கு 0.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து நடவு முடிந்த, 15-வது, 25-வது மற்றும் 45-வது நாட்களில் தெளித்தால், நோயைக் கட்டாயம் கட்டுப்படுத்திவிடலாம்.
மேலும் விபரங்களுக்கு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகளாக செல்விரமேஷ், சீ. கிருஷ்ணகுமார் ஆகியோரை 7904310808 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!